ட்ரம்ப் 17 நாட்கள் லீவுலே இருக்காரு.. வட கொரியா ஏதாச்சும் பண்ணுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 17 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார். வெள்ளை மாளிகையிலிருந்து, நியூஜெர்ஸியில் அவருடைய சொந்த கால்ஃப் மைதானம் அமைந்துள்ள பங்களாவுக்கு தற்காலிக ஓய்வுக்காக சென்றுள்ளார்.

அட அமெரிக்க அதிபரும் மனுஷன் தானே.. லீவு எடுக்குறதெல்லாம் குத்தமாய்யா?. இல்லை தான், அமெரிக்க அதிபர்கள் கோடையிலும், கிறிஸ்துமஸ் காலங்களிலும் விடுமுறை எடுத்து குடும்பத்தாருடன் செலவிடுவது வழக்கம் தான். ஆனாலும் உளவுத் துறை அறிக்கையும், முக்கிய தகவல்களும் அவருக்கு தினம் தோறும் சென்று கொண்டு தான் இருக்கும்.

Trump on Vacation

வெள்ளை மாளிகையில் தங்கியிருக்க மாட்டார்கள். அன்றாட அலுவல்களை பார்க்க மாட்டார்கள் அவ்வளவுதான். நாட்டில் ஏதாவது முக்கிய பிரச்சனை ஏற்பட்டால் விடுமுறையை ரத்து செய்து விட்டு வெள்ளை மாளிகை திரும்பி விடுவார்கள்.

ட்ரம்பின் லீவு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்றால், நான் அதிபர் ஆனால் ஒரு நாள் கூட லீவு எடுக்க மாட்டேன் என்று ஆவேசப்பட்டவர் தான் ட்ரம்ப்.

ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு முறையும் விடுமுறையில் செல்லும் போது அதை கடுமையாக விமர்சித்தவர் ட்ரம்ப். நாட்டில் பிரச்சனைகள் இருக்கும் போது விடுமுறையில் செல்லும் அதிபர் தேவையா என்றெல்லாம் முழங்கியவர் தான் ட்ரம்ப்.

இப்போது, சொன்னதை எல்லாவற்றையும் வசதியாக மறந்து விட்டு 17 நாட்கள் லீவு போட்டு சென்றுள்ளார். இந்த ஆண்டு மட்டும் இது வரையிலும் 53 நாட்கள் ட்ரம்ப் வேலை செய்யவில்லை. முதல் ஆண்டு ஒபாமா ஆகஸ்ட் மாதம் வரையிலும் 15 நாட்கள் மட்டுமே வேலை செய்யாமல் விடுப்பில் இருந்தார்.

ஒபாமாவைக் காட்டிலும் மும்மடங்கு லீவு போட்டுச் சென்ற ட்ரம்ப் தான் ஒபாமவை கடுமையாக விமர்சித்தவர் என்பதுதான் வேடிக்கை..

எல்லாம் சரிதான், ட்ரம்ப் லீவுலே இருக்காருன்னு வடகொரியா ஏதாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அனுப்பிவிடப் போகிறது.

-இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
President Trump is gone for 17 days vacation to his golf course in New Jersey. During Obama's presidency, Trump has criticized Obama for taking vacaion. Relatively during the first year in office till August, Trump has taken 53 days off while Obama took only 15 days.
Please Wait while comments are loading...