எங்க பட்டன் பெருசு.. அமுக்கினேன், டோட்டல் வட கொரியாவும் குளோஸ்.. டிரம்ப் பொளேர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வட கொரியாவிடம் உள்ள அணு ஆயுதத்தை விட பல மடங்கு பெரிய அணு ஆயுதம் எங்களிடம் உண்டு. பட்டனை அழுத்தினால் போதும், மொத்த வட கொரியாவும் சாம்பலாகி விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.

முந்தைய அமெரிக்க அதிபர்களை விட டிரம்ப்பை ரொம்பவே சீண்டி வருகிறார் வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜோங் உன். இந்த நிலையில் அமெரிக்காவை அழிக்கும் அணு குண்டு தயாராக இருப்பதாகவும், பட்டனை அழுத்தினால் அமெரிக்காவை காலி செய்து விடுவோம் என்றும் கிம் மிரட்டல் விடுத்துள்ளார்.

Trump warns Kim Jong Un on 'Nuclear button'

புத்தாண்டையொட்டி அவர் வாழ்த்து விடுத்து பேசியபோது, மொத்த அமெரிக்காவையும் எங்களது அணு ஆயுதங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டோம். எப்போதும் எனது டேபிளில் அணு ஆயுத பட்டன் தயார் நிலையில்தான் இருக்கும். இதுதான் உண்மை நிலவரம். இது மிரட்டல் அல்ல என்று கூறியிருந்தார்.

இதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், வட கொரியாவிடம் உள்ளதை விட பெரிய பெரிய அணு ஆயுதம் எங்களிடம் உள்ளது. அவரிடம் மட்டும்தான் பட்டன் இருப்பது போல பேசுகிறார். என்னிடமும் பெரிய பட்டன் உள்ளது.

அவரிடம் உள்ளதை விட இது பெரியது. சிறப்பாக செயல்படக் கூடியது, சக்தி வாய்ந்தது. அழுத்தினேன், மொத்த வட கொரியாவும் காலி. இதை யாராவது அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார் டிரம்ப்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US president Donald Trump has warned North Korean leader Kim Jong Un and said that "Will someone from his depleted and food starved regime please inform him that I too have a Nuclear Button, but it is a much bigger & more powerful one than his", Trump has warned.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற