For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏலே.. நீ ஆர்டிஸ்ட்டுனு நிரூபிச்சுட்ட.. சோஃபாவை சாப்டுறாங்க? என்ன இது? வியப்பூட்டும் துருக்கி பெண்

Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: சோஃபா, கூடைப்பந்து, பெட்டி, ஹாட்பாக்ஸ் என்று நீங்கள் இந்த புகைப்படத்தில் பார்த்தது எல்லாம் உண்மையில் நீங்கள் நினைக்கும் பொருள் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அனால், நம்பித்தான் ஆகவேண்டும். அதுதான் துருக்கியை சேர்ந்த பெண்ணின் கலை வண்ணம்.

நாம் பார்க்கும் ஒரு பொருள், மனிதர், விலங்கு என எதை வேண்டுமானாலும் உண்மை போன்றே மெழுகு சிலையாக வடிவமைக்கும் பல்வேறு தொழில்நுட்பங்கள் உலகில் தோன்றிவிட்டன.

பழங்கள், காய்கறிகள், பனிக்கட்டிகள், மணல் என பல்வேறு மூலப்பொருட்களை கொண்டு தத்ரூபமாக பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. மொத்தம் 117 உடம்புகள்.. கிராமமே ஒன்று திரண்டு விநோதம்.. என்ன காரணம்?தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. மொத்தம் 117 உடம்புகள்.. கிராமமே ஒன்று திரண்டு விநோதம்.. என்ன காரணம்?

துருக்கி பெண்

துருக்கி பெண்

ஆனால், இந்த செய்தியில் பார்க்கப்போவது மிகவும் புதுமையான, வியக்க வைக்கும் ஒரு தகவல். துருக்கியை சேர்ந்த பெண் ஓவியரான துபா கெச்கில், கேக் மற்றும் சுகர் கலைஞர் என அறியப்படுகிறார். இவர் நாம் நிஜ உலகில் காணும், பயன்படுத்தும் பொருட்களை போன்றே தத்ரூபமாக கேக்குகளை வடிவமைத்து அசத்தி வருகிறார்.

கேக் பொம்மை

கேக் பொம்மை

ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது மகனின் கார் போன்றே கேக் ஒன்றை வடிவமைத்தார். அதற்கு வரவேற்பு அதிகரிக்கவே இதுபோன்ற கேக்குகளை தொடர்ந்து வடிவமைக்க முடிவு செய்தார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் துபா கெச்கில்.

ஓவியர் டூ கேக் கலைஞர்

ஓவியர் டூ கேக் கலைஞர்

தொடக்கத்தில் இஸ்தான்புல்லில் ஓவிய ஸ்டூடியோவை தொடங்கிய துபா, அதை கேக் கடையாக மாற்றி இது கேக்தானா அல்லது நிஜ பொருளா என்று காண்போர் பிரம்மிக்கும் வகையில் தன்னுடைய படைப்புகளை செய்து வருகிறார். 44 வயதான துபா கெச்கில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஜ உலக பொருட்களை போல் வடிமைத்து இருக்கும் கேக் படங்களை பதிவேற்றம் செய்து உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

மெய் சிலிர்க்கும் மக்கள்

மெய் சிலிர்க்கும் மக்கள்

தற்போது இன்ஸ்டாகிராமில் அவருக்கு 12 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். என்ன இந்த பொண்ணு, நூடுஸ்லை ஹாட்பாக்சுடன் சாப்பிடுது, சூவை வெட்டுது, டைனோசர் பொம்மையை கூட விடமல் வெட்டுது, கூடை பந்தைகூடவா சாப்பிடுவார்கள் என்று கேட்கும் அளவிற்கு துபா கெச்கிலின் கலைத் திறன் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்து வருகிறது.

 பெற்றோரும் ஓவியர்கள்

பெற்றோரும் ஓவியர்கள்

மத்திய துருக்கியில் உள்ள அனாடோலியன் மாகாணத்தின் எஸ்கிசெஹிர் பகுதியில் பிறந்தவர் துபா கெச்கில். இவரது தாய் மற்றும் தந்தை இருவருமே திறமையான ஓவியர்கள். பெயிண்டில் தங்கள் திறமையை காட்டி வந்த பெற்றோர்களுக்கு பிறந்த துபா கெச்கில் கேக்கிலும், க்ரீமிலும் அதை தனது திறமையை காட்டியுள்ளார்.

கேக் சிலை

கேக் சிலை

திருமணம் செய்த பிறகு துருக்கி தலைநகர் இஸ்தான்புலுக்கு குடிபெயர்ந்த துபா கெச்கில், தனது கலைத் திறனுக்கு மேலும் மெருகூட்டினார். அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் மட்டுமின்றி, மனிதர்கள், உலக நாடுகளின் தலைவர்களின் வடிவத்திலும் கேக் சிலையை செய்து அசத்தி இருக்கிறார் துபா கெச்கில்.

டிரம்ப் கேக்

டிரம்ப் கேக்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜெர்மனி அதிபர் ஏஞ்செலா மெர்கெல், ஹாரி பாட்டர் என பல உலக தலைவர்கள் மற்றும் சினிமா கதாபாத்திரங்களின் உருவங்களை தத்ரூபமாக கேக் சிலையாக வடிவமைத்து இருக்கிறார் துபா கெச்கில். இவரது வித்தியாசமாக கேக்கை வாங்க துருக்கி மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 உலக பிரபலம்

உலக பிரபலம்

துபா கெச்கிலின் தத்ரூபமான கேக் சிலைகளால் அவரது வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இவரது கேக்குகளை வாங்கிச் செல்கிறார்கள். ரெட் ரோஸ் கேக் என்ற இவரது கேக் விற்பனையகம் இரண்டாக அதிகரித்து உள்ளது. இவரது கேக் விலை 33 அமெரிக்க டாலர்கள் தொடங்கி 1,350 அமெரிக்க டாலர்கள் வரை உள்ளது. துருக்கியின் பெயர் தெரியாத ஊரில் பிறந்து தற்போது உலக பிரபலமாகி இருக்கிறார் துபா.

English summary
Can you believe that the sofa, basketball, box, hotbox you see in this photo is not what you think it is? So, you have to believe. That is the artistic cake design of the Turkish woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X