For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

Google Oneindia Tamil News

இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது.

கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை கண்டுபிடித்து இறுதிகட்ட சோதனைகளை செய்து வருகின்றன.

சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அதன் நெருங்கிய நட்பு நாடான துருக்கி பரிசோதித்து பார்த்தது. இதில் 91 சதவீதம் அளவுக்கு வலுவாக செயல்பட்டதாக துருக்கி திருப்தி தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா ஒரே நாளில் 39,036 பேர் பாதிப்பு - 574 பேர் மரணம் பிரிட்டனில் வேகமாக பரவும் உருமாறிய கொரோனா ஒரே நாளில் 39,036 பேர் பாதிப்பு - 574 பேர் மரணம்

யாருக்கு மருந்து

யாருக்கு மருந்து

இது தொடர்பாக தருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா கூறுகையில், சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசி நல்ல பலன் அளித்துள்ளது. எனவே முதலில் நாங்கள் மூன்று மில்லியன் சினோவாக் டோஸ் பெற உள்ளோம். 50 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை அடுத்த மாதம் முதல் பெறப்போகிறது. இந்த மருந்துகள் முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும். சீனாவில் இருந்து முதல்கட்டமாக வரும் ஞாயிறு அன்று மருந்து வர உள்ளது.

30மில்லியன் டோஸ்

30மில்லியன் டோஸ்

அடுத்த சில நாட்களில் அங்காரா ஃபைசர் / பயோஎன்டெக் நிறுவனத்துடன் 4.5 மில்லியன் டோஸ் மருந்து தருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறோம். மேலும் அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்தும் அதன் ஜெர்மன் கூட்டாளரிடமிருந்தும் 30 மில்லியனை கூடுதலாக வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

தடுப்பூசி

தடுப்பூசி

எங்களால் (துருக்கி) ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் அல்லது இரண்டு மில்லியன் மக்களுக்கு கூட தடுப்பூசி போட முடியும். தடுப்பூசிகளை முதல் கட்டமாக ஒன்பது மில்லியன் மக்களுக்கு வழங்க போகிறோம்" என்றார்.

என்ன ரிசல்ட்

என்ன ரிசல்ட்

துருக்கி அண்மையில் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை 7,371 தன்னார்வலர்களுக்கு செலுத்தி சோதித்து பார்த்துள்ளது. இதில் 91.25 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டியது, இருப்பினும் மூன்றாம் கட்ட சோதனைகள் இன்னும் நிறைவடையவில்லை. 8.3 கோடி வாழும் துருக்கியில் இதுவரை 22 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 19,115 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

English summary
Turkey will receive its first shipment of China's Sinovac coronavirus vaccine within days as preliminary domestic tests showed it was 91% effective, Health Minister Fahrettin Koca said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X