For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டுவிட்டர் எழுத்து வரம்பில் புதிய மாற்றம்.. பயனர்கள் மகிழ்ச்சி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சான்பிரான்சிஸ்கோ: சமூக வலைத்தளமான டுவிட்டரில் இனி லிங்க் மற்றும் புகைப்படங்கள் 140 என்ற எழுத்து வரம்பு எண்ணிக்கையில் கணக்கிடப்படாது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது..

டுவிட்டரில் ஒரு டுவீட்டுக்கு 140 எழுத்துக்கள் வரை மட்டுமே பயனர்கள் பயன்படுத்த முடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த 140 எழுத்துக்களில் 23 எழுத்துக்கள் லிங்க்கும், 24 எழுத்துக்கள் புகைப்படத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

 Twitter brings major changes to its 140-character limit

தற்போது, டுவிட்டரில் பயன்படுத்தப்படும் 140 எழுத்துக்களில் புகைப்படம், ஹேஸ்டேக், வீடியோ, லிங்க்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பயனர்கள் பகிர நினைப்பதை தெளிவாக பகிர உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதி தற்போது நடைமுறைக்கு வந்திருப்பதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முறையின் மூலம் டுவிட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140 லிருந்து 10,000 ஆக தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய வசதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

English summary
Twitter is making some big changes, at least in the context of 140 characters or less.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X