வெறித்தனம் தலைவா..!“இது எங்கள் நாடு ஆயுதத்தை கீழே போட முடியாது” ஜெலன்ஸ்கியை கொண்டாடும் மக்கள் ஆர்மி!
கீவ் : நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை, இது எங்கள் நாடு என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ வெளியிட்டுள்ள நிலையில், ட்விட்டர் வாசிகள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதலில் நிலைகுலைந்தாலும் , உறுதியுடன் களமாடி வருகின்றனர் உக்ரைன் ராணுவத்தினர்.
உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக மக்களும் ஆயுதங்கள் ஏந்தி போருக்கு தயாராகி வருகின்றனர். அதிபர் வோலோடிமிரை குறிவைத்து தலைநகர் கீவ் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷ்ய ராணுவம்.

ரஷ்ய வீரர்கள் பலி
3ஆம் நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள நீர் மின் நிலையத்தை கைப்பற்றிய ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கிட்ட தட்ட முழுமையாக சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இருந்தும் உக்ரைன் மன உறுதியோடு போராடி வருகிறது. 3,500க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைக்கு தயார்
ஆயுதங்களை கைவிட்டு விட்டு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு குழு அனுப்ப முடிவு செய்துள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இருந்தும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை எனவும் உக்ரைன் ராணுவத்தை சரணடைய அதிபர் வோலோடிமிர் உத்தரவிட்டதாக செய்திகள் பரவியது. அதனை மறுத்துள்ள அவர் தாங்கள் தொடர்ந்து போரிடுவோம் என கூறியுள்ளார்.

புதிய வீடியோ
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், "நான் உக்ரைன் ராணுவத்தை சரணடைய சொல்லிவிட்டதாக சில வதந்திகள் கிளப்பப்பட்டிருக்கிறது. நாங்கள் எங்கள் ஆயுதங்களை கீழே போட போவதில்லை. எங்கள் நாட்டை விட்டுக் கொடுக்க போவதில்லை. இது எங்கள் நாடு" என உதட்டில் புன்னகையுடனும், மனதில் உறுதியுடனும் பேசியுள்ளார். மேலும் தான் காலை உணவு சாப்பிட்டது என் நாட்டில், இரவு உணவு சாப்பிடப்போவதும் என் நாட்டில், நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் இல்லை என முன்னதாக அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருந்தார்.

உலகம் முழுவதும் வைரல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஒரு நாட்டின் அதிபர் தம் நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சினை எனும்போது நாட்டை விட்டு ஓடி ஒளியாமல் அவர்களோடு தோளுக்கு தோளாய் நின்று பணியாற்றுவதை சிலாகித்து கொண்டாடுகின்றனர். ஜெலன்ஸ்கி ஒரு உலக அளவில் பிரபலமான தலைவராக இல்லை எனினும் கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மன உறுதியுடன் அவர் பேசுவதைக் கேட்டு "ஜெலன்ஸ்கி ஆர்மி" உருவாக்கி உள்ளனர் நெட்டிசன்கள். இதில் ஏராளமானோர் இணைந்து ஜெலன்ஸ்கி ஆதரவாகவும் பூக்களின் மக்களுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த கோரி உலக அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications