For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா மோசடி.. கோபத்தில் ஓபாமா.. ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேர் வெளியேற்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8ந் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பாப்புலர் ஓட்டுகளை பெரும்பான்மையாக பெற்றாலும், எலக்டோரல் ஓட்டில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பிடம் தோல்வியடைந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.

U.S.A evicts Russians for spying, imposes sanctions after election hacks

இந்த தேர்தல் முறையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடன், இப்போது இதே குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப் வெற்றி பெறும் வகையில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கூஷிபேர் 2.0 என்ற மால்வேர் பயன்படுத்தப்பட்டதாகவும், இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்னோடன் தெரிவித்தார். எனவே, அதிபர் தேர்தலில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் இருந்து அந்நாட்டு அதிகாரிகள் 35 பேரை அமெரிக்கா அதிரடியாக நீக்கம் செய்துள்ளது. மேலும் தூதரக அதிகாரிகள் 35 பேரை அவர்களுடன் குடும்பத்துடன் அமெரிக்காவை விட்டு வெளியேற 72 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தேர்தல் நேரத்தில் ரஷ்யாவின் தந்திர நடவடிக்கையில் அமெரிக்கா தோல்வியடைந்ததாக ஓபாமாவே ஒப்புக்கொண்டதைப்போல ஆகிவிட்டது.

English summary
President Barack Obama on Thursday ordered the expulsion of 35 Russian suspected spies and imposed sanctions on two Russian intelligence agencies over their involvement in hacking U.S. political groups in the 2016 presidential election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X