ஐக்கிய அமீரகம் செல்வது ரொம்ப ஈஸி! ஆன் அரைவல் விசா அறிமுகம்! ஆனால் ஒரு கண்டிஷன் இருக்கு! என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐக்கிய அமீரகம் செல்லும் இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய விசா முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு நேரடியாகச் சென்று ஆன் அரைவல் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகளவில் செல்லும் வெளிநாடுகளில் முக்கியமானது ஐக்கிய அமீரகம். குறிப்பாகக் கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் இந்தியர்கள் ஐக்கிய அமீரகம் செல்வார்கள்.

uae dubai world


இதற்கிடையே ஐக்கிய அமீரகத்திற்கு வரும் இந்தியர்களுக்கு புதிய விசா முறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதி வாய்ந்த பயணிகள் ஆன் அரைவல் மூலம் விசா பெற்றுக் கொள்ளலாம்.

விசா என்றால் என்ன: பொதுவாக நாம் எந்தவொரு நாட்டிற்கும் செல்ல வேண்டும் என்றாலும் அந்த நாட்டின் விசா வேண்டும். அதாவது நீங்கள் இப்போது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியா செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் ஆஸ்திரேலியா செல்ல அந்நாட்டின் விசாவை முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும். விசா ஒரு நாட்டிற்குச் செல்ல தேவையான நுழைவுச்சீட்டு போல செயல்படும்.!

பெரும்பாலும் இந்த விசாவை நாம் அந்நாட்டிற்குச் செல்லும் முன்பே எடுக்க வேண்டும். அதேநேரம் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு ஆன் அரைவல், அதாவது அங்குச் சென்றவுடன் கூட எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் அங்குச் சென்று நேரடியாக ஆன் அரைவல் விசா எடுத்துக் கொள்ளலாம். இதற்கிடையே இப்போது ஐக்கிய அமீரகமும் இதுபோல ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதேநேரம் இதில் சில கண்டிஷன்கள் உள்ளன. அதைப் பூர்த்தி செய்யும் இந்தியர்களுக்கு மட்டுமே ஆன் அரைவல் விசா வழங்கப்படும்.

14 நாட்கள்: அதாவது அமெரிக்கா, பிரிட்டன் அல்லது எந்த ஐரோப்பிய யூனியன் நாட்டிலிருந்தும் செல்லுபடியாகும் நிரந்தர குடியுரிமை அட்டை அல்லது விசா வைத்திருப்போர் அன் அரைவல் மூலம் விசா எடுத்துக் கொள்ளலாம்.. இந்த புதிய முறையில் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்றவுடன் 14 நாள் ஆன் அரைவல் விசா எடுத்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே சுமார் 35 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் நிலையில், அது வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையேயான நல்லுறவு மேம்பட்டு வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"கோல்டன் விசா.." ஐக்கிய அமீரகத்தின் ஸ்பெஷலே இதுதான்.. இந்தியர்கள் இதை பெற கண்டிஷன்கள் என்ன!


கண்டிஷன்கள் என்ன:

  • அமெரிக்காவால் வழங்கப்பட்ட விசா, ரெசிடென்ஸ் பெர்மிட் அல்லது கிரீன் கார்டு வைத்திருக்க வேண்டும்..
  • அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடு அல்லது பிரிட்டன் வழங்கிய விசா அல்லது ரெசிடென்ஸ் பெர்மிட் வைத்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.
  • இந்த கண்டிஷன்களை பூர்த்தி செய்யும் பயணிகள் ஆன் அரைவல் முறையில் 14 நாள் விசா வழங்கப்படும். தேவையான கட்டணங்களைச் செலுத்தினால் இந்த விசாவை 60 நாட்கள் வரை நீட்டிக்கலாம்.

இது இந்தியர்களுக்கு ஐக்கிய அமீரக பயணத்தை எளிதாக்குகிறது. மிகவும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது. இந்த மாற்றம் மூலம் இந்தியச் சுற்றுலாப் பயணிகள், பிஸ்னஸ்மேன்கள் பெரியளவில் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+