"கோல்டன் விசா.." ஐக்கிய அமீரகத்தின் ஸ்பெஷலே இதுதான்.. இந்தியர்கள் இதை பெற கண்டிஷன்கள் என்ன!

Subscribe to Oneindia Tamil

அமீரகம்: இந்தியர்கள் வெளிநாடு செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஐக்கிய அமீரகத்தில் கோல்டன் விசா என்ற ஒன்று இருக்கிறது. பல்வேறு சலுகைகளை அள்ளி தரும் இந்த கோல்டன் விசா இந்தியர்களுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கிறது. இதன் சலுகைகள், நிபந்தனைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியர்கள் செட்டில் ஆவது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதன்படி இந்தியர்கள் அதிகம் விரும்பி செல்லும் நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அமீரகம் இருக்கிறது.

UAE world middle east

ஐக்கிய அமீரகம்: தொழிலாளர்கள் மட்டுமின்றி பெரும் கோடீஸ்வரர்கள் கூட அதிகம் செல்லும் நாடாகவே ஐக்கிய அமீரகம் இருக்கிறது. இந்தாண்டு மட்டும் சுமார் 4,300 இந்திய கோடீஸ்வரர்கள் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களில் பலரும் ஐக்கிய அமீரகத்திற்கே செல்ல வாய்ப்பு இருப்பதாகப் பிரபல சர்வதேச முதலீட்டு ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸின் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அமீரகத்தைப் பொறுத்தவரை அதிகம் முதலீடு செய்யும் பெரும் பணக்காரர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படுவதால் அங்கே செல்லவே பலரும் விரும்புகிறார்கள். கோல்டன் விசா இருந்தால் ஐக்கிய அமீரகத்தில் உள்ள அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராசல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய ஏழு எமிரேட்டுகளில் எங்கு வேண்டுமானாலும் தங்கி பணிபுரியலாம். மேலும், முதலீடுகளையும் செய்யலாம்.

சலுகைகள்: இந்த கோல்டன் விசாவில் இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து நாம் பார்க்கலாம். இந்த கோல்டன் விசா இருந்தால் ஒருவர் ஐக்கிய அமீரகத்திலேயே நீண்ட காலம் தங்கலாம்.. அதாவது உள்ளூர் ஸ்பான்சர் இல்லாமல் நீண்ட கால தங்குவதை கோல்டன் விசா அனுமதிக்கிறது. மேலும், கோல்டன் விசா வைத்திருப்போர் பெரிதாக எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஐக்கிய அமீரகம் சென்று வர முடியும்.

கோல்டன் விசா முழுமையான தொழில் சுதந்திரத்தை வழங்குகிறது. பிஸ்னஸ் செய்வோருக்கும் சரி, புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கும் சரி சாதகமான சூழ்நிலையை கோல்டன் விசா ஏற்படுத்தும்.

நிபந்தனைகள் இருக்கு: மேலும், கோல்டன் விசா இருப்போர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் வீட்டு வேலை செய்ய பணியாளர்களுக்கும் ஸ்பான்சராகவும் இருக்கலாம். இவ்வளவு சலுகைகளை அள்ளி தரும் கோல்டன் விசாவை அந்நாட்டு அரசு அனைவருக்கும் கொடுப்பதில்லை. இதற்கு சில நிபந்தனைகள் இருக்கிறது. அதை நிறைவேற்றினால் மட்டுமே கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

மருத்துவர்கள் அல்லது விஞ்ஞானியாக இருப்போர் சம்பந்தப்பட்ட சயின்ஸ் குழு அல்லது சுகாதார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். அதேநேரம் கலைத் துறையில் இருப்போருக்குக் கலாச்சாரம் & கலைத் துறையின் அனுமதி தேவைப்படும். நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர்களாக இருப்போர் எதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவம் இருக்க வேண்டும். மேலும், 50,000 தினார் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹ 11,42,808 ஊதியமாகப் பெற வேண்டும்.

முதலீட்டாளர்கள் நிச்சயம் எதாவது பிஸ்னஸ் செய்து கொண்டு இருக்க வேண்டும். இவர்கள் 20 லட்சம் தினாரை டெபாசிட் செய்ய வேண்டும்.. மேலும், 250,000 தினாரை வரியாகச் செலுத்த வேண்டும். தொழில்முனைவோராக இருந்தால் அவர்களின் நிறுவனம் குறைந்தது 5 லட்சம் தினார் மதிப்புடையதாக இருக்க வேண்டும். தேவையான சில ஒப்புதல்களைப் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வளவு காலம் செல்லுபடியாகும். இந்த கோல்டன் விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அதன் பிறகு தேவைப்பட்டால் புதுப்பிக்க முடியும். இந்த கோல்டன் விசாவை பெறவே இந்தியர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏற்கனவே கமல், மம்மூட்டி, மோகன்லால் ஆகியோருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+