For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா- இங்கிலாந்து 5 நாள் சர்வதேச உச்சி மாநாடு லண்டனில் தொடங்கியது

இந்தியா- இங்கிலாந்து 5 நாள் சர்வதேச உச்சி மாநாடு லண்டனில் தொடங்கியது.

By Mathi
Google Oneindia Tamil News

லண்டன்: இந்தியா- இங்கிலாந்து இடையேயான 5 நாள் சர்வதேச வர்த்தக உச்சி மாநாடு இன்று லண்டனில் தொடங்கியது.

இந்தியா ஐஎன்சி நிறுவனத்தின் ஏற்பாட்டில் லண்டனில் இந்தியா- இங்கிலாந்து 5 நாள் மாநாடு தொடங்கியுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான உறவு மேம்பட சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது.

ukindia

சர்வதேச இங்கிலாந்து சர்வதேச இந்தியாவை சந்திக்கிறது என்பதை மையமாக வைத்து இந்த மாநாடு நடைபெறுகிறது. லண்டன் மற்றும் பக்கிங்காம்சையரில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்வில் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹா, மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, மேற்கு சஃஃபோல்க் எம்பி மாட் ஹான்காக், இந்தியன் ஐஎன்சி நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மனோஜ் லட்வா ஆகியோர் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் சர்வதேச தொழிலதிபர்கள், இந்தியா, இங்கிலாந்தின் மூத்த அரசியல் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா- இங்கிலாந்து உறவில் புதிய அத்தியாயத்தை இம்மாநாடு உருவாக்க உள்ளது.

இங்கிலாந்து எம்.பி.க்கள் எம் லியாம் ஃபோக்ஸ், மாட் ஹான்காக் ஆகியோர் முக்கிய உரை நிகழ்த்தினர். இதேபோல் இந்திய தூதர் சின்கா, இன்போசிஸ் மூத்த துணைத் தலைவர் அஜய் விஜே ஆகியோரும் உரையாற்றினர்.

English summary
UK-India Week 2018 and the 2nd Edition of 100 Most Influential in UK India Relations launched today in londo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X