உக்ரைன் போர் : அணு உலைகளை சேதப்படுத்திய ரஷ்யா.. விசாரணைக்கெல்லாம் வர முடியாது என பிடிவாதம்.. தீர்வு?
கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 14வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா தொடர்ந்து தலைநகரை கைப்பற்றும் திட்டத்துடன் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய அணு உலையான செர்னோபில்லையும் ரஷியா கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவ்ல் வெளியான நிலையில் அங்கு போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஜெலன்ஸ்கி கோரிக்கை
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

விமானங்கள் பறக்க தடை
உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மின்கட்டமைப்புகள் சேதம்
இச்சூழலில் தான் செர்னோபில் அணு மின் நிலையத்திற்கு மின்வசதி வழங்கும் மின் கட்டமைப்புகள் முழுமையாக சேதம் அடைந்து விட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மின் கட்டமைப்புகளை மீண்டும் சரி செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை எனத்தெரிவித்துள்ள உக்ரைன், அணு எரிபொருள் சேமிப்பு வசதியின் குளிரூட்டும் அமைப்புகள் மின் வசதியின்றி இருந்தால் கதிர்வீச்சு அதிகரிக்கும்.ரஷியாவின் நடவடிக்கைகள் ஐரோப்பாவை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. மின் விநியோகத்தை மீட்டெடுக்க அனுமதிக்குமாறு உலக நாடுகள் ரஷியாவிடம் வலியுறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
Recommended Video

ரஷ்யா பிடிவாதம்
ரஷ்ய படைகளை வெளியேற்றக் கோரி உக்ரைன் தாக்கல் செய்துள்ள மனு மீது ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் விசாரணை நடைபெற்றபோது, ரஷியா புறக்கணித்தது. இந்நிலையில், விசாரணையை புறக்கணித்தது குறித்து ரஷியா தரப்பில் முதல் முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இது பொருத்தமில்லாத அபத்தமான வழக்கு என்பதால் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை' என ரஷிய வெளியுறவுத்துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications