For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உக்ரைனில் உச்சகட்ட போராட்டம்! தலைநகரை விட்டு அதிபர் ஓட்டம்!!

By Mathi
Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் தலைநகர் கீவை விட்டு அதிபர் விக்டர் யானுகோவிச் வெளியேறிவிட்டார். அவர் எங்கே இருக்கிறார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Ukraine President Leaves Kiev After Concessions

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்துவருகிறார். இதை எதிர்த்து கடந்த 3 மாத காலமாக அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவி விலக வேண்டும், புதிய தேர்தலை அறிவிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கை.

அதிபருக்கு எதிராக அண்மையில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தினர். இதன் பின்னர் தலைநகர் கீவ், போராட்டக் குழுவினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதனால் விக்டர் யானுகோவிச் தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விட்டாலி கிளிட்ஸ்கோ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

English summary
Ukraine’s embattled president reportedly left the capital for his support base in Ukraine's Russia-leaning east, just hours after he made huge concessions aimed at ending deadly violence that has been shaking the country for weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X