“54வது நாள்” உயிருக்கு உத்தரவாதம் தந்த ரஷ்யா! “போற உயிர் சண்டையில் போகட்டும்” உறுதியுடன் உக்ரைன்..!
கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 54வது நாள் தொடங்கி உள்ள நிலையில் சரணடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போட போவதில்லை என கூறியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் எட்டாவது வாரத்தில் நுழைந்திருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறியிருக்கலாம், ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மற்ற பகுதிகளில் இடைவிடாத தாக்குதல் தொடர்கிறது.
முற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலைக் கைப்பற்றுவதில் ரஷ்யா கவனம் செலுத்தும் நிலையில், உக்ரைன் இறுதிவரை போராடுவதாக" உறுதியளித்துள்ளது.

உக்ரைன் போர்
ரஷ்யா முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உள்ள பெரும்பாலான நகர்ப்புறங்களை பைப்பற்றியதாகக் கூறியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால், முற்றுகையிடப்பட்ட நகரத்தில் உள்ள உக்ரைன் துருப்புக்கள் "விடியலில் சரணடைய வேண்டும்" என்ற ரஷ்ய கோரிக்கையை மீறி இன்னும் சண்டையிடுவதாக கூறியுள்ளார். "நகரம் இன்னும் வீழ்ச்சியடையவில்லை," என்று அவர் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ABC செய்தி நெட்வொர்க்கிற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

ஜெலன்ஸ்கி பேச்சு
ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு மத்தியில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த பேச்சுக்களை தொடங்கியுள்ளார். "ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் ஜார்ஜியோவா உடன் உக்ரைனின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் போருக்குப் பிந்தைய புனரமைப்புக்கான தயாரிப்புகளை உறுதிப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. எங்களிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன, IMF மற்றும் உக்ரைன் இடையே ஒத்துழைப்பு தொடரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்:" என கூறியுள்ளார்

ரஷ்யாவுக்கு ஆறுதல்
இந்நிலையில் மரியுபோல் "எப்போதும் உக்ரைனுடன் இருக்கும்" என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் ஒரு ட்வீட்டில் அறிவித்தது, போர் உக்கிரமான துறைமுக நகரத்தில் சரணடையுமாறு ரஷ்யா கெடு விதித்த போதிலும் அதனை உக்ரைன் ஏற்க மாறுத்து விட்டது. மரியுபோலின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும், தலைநகரான கியேவில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு இது ஆறுதலான விஷயம் தான்.

தொடக்கப் புள்ளி
ஒரு முக்கியமான நடவடிக்கையில், ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு உறுப்புரிமையை முடிவு செய்ய ஒரு தொடக்க புள்ளியாக அமைகிறது என செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரைன் நாட்டின் முயற்சியை விரைவாக தொடங்குவதாக முன்னதாக உறுதியளித்து குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications