Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதயம் உருகுதே.. "மிஸ் யூ டா.." கண்ணீருடன் தந்தை.. கலங்கி நின்ற மகள்! உக்ரைன் போரின் உச்சகட்ட சோகம்

Subscribe to Oneindia Tamil

கிவி: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், தலைநகர் கிவியில் இருந்து பாதுகாப்பான இடங்களைத் தேடி மக்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், போர் சூழலில் மகளை கண்ணீருடன் அனுப்பி வைக்கும் தந்தையின் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

Recommended Video

    Ukraine crisis: ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை.. தந்தையை விட்டு விடைபெறும் மகளின் உருக்கமான வீடியோ

    உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி 24 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. 300க்கும் அதிகமான உயிரிழப்புகள் உக்ரைன் தரப்பில் நிகழ்ந்திருக்கிறது. பல சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. வான், கடல், தரை என அனைத்து விதத்திலும் உக்ரைனை தாக்கி வருகிறது ரஷ்யா.

    இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி சென்று கொண்டிருக்கிறார்கள். பலர் பதுங்கு குழிகளில் பத்திரமாக தங்கியுள்ளார்கள். இந்நிலையில் கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் தாக்குதல் அதிகமாக இருப்பதால், மேற்கு எல்லையை நோக்கி பலர் சென்று கொண்டிருக்கிறார்கள்.

    உக்ரைன்

    உக்ரைன்

    உக்ரைனில் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், 16 வயது முதல் 60 வயது வரையிலான ஆண்கள் ராணுவ பணிகளில் ஈடுபட வேண்டும் என உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட தயாரானால், அவர்களுக்கு ஆயுதம் வழங்கவும் அரசு தயாராக இருக்கிறது. இதனால் உக்ரைன் ஆண்கள் அங்கிருந்து வெளியேற அனுமதி கிடையாது.

    அப்பா

    அப்பா

    இந்நிலையில், மனைவி மற்றும் மகளை பத்திரமான இடத்துக்கு அனுப்புவதற்கான பேருந்தில் ஏற்றி வழியனுப்பி வைத்த தந்தையின் உணர்ச்சிகரமான நிமிடங்களை வீடியோவாக சிலர் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். போர் சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். எப்போது தாக்குதல் நடக்கும், எங்கு குண்டு போடுவார்கள் என்று எதுவும் தெரியாத சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    மிஸ் யூ

    மிஸ் யூ

    இப்போது வழியனுப்பும் மகளையும், மனைவியையும் மறுபடியும் காண்போமா என்ற தவிப்பு அந்த தந்தையின் கண்ணீரில் தெரிகிறது. மகளை பேருந்தில் ஏற்றிவிடும் போது, அவள் தந்த காகிதத்தை பிரித்துப் படித்து, வெடித்து அழுத தந்தைக்கு அங்கு தைரியம் சொல்லக்கூட ஆள் இல்லை. மகளை உச்சிமுகர்ந்து, 'மிஸ் யூ' என்று தன் ஒட்டு மொத்த பாசத்தையும் கட்டியணைத்து கண்ணீருடன் வெளிப்படுத்தியதைப் பார்க்கும் எல்லோர் கண்களும் கண்ணீரால் நினைந்திருக்கும்.

    போர்

    போர்

    போர் முடிந்து தன் குடும்பத்தைக் காண்பேனா, போர் முடியும் போது நான் உயிருடன் இருப்பேனா, இப்படி எத்தனையோ அந்த தந்தையின் எண்ணமாக இருந்திருக்கும். ஆனால் அந்த குழந்தைக்கு தெரிந்ததெல்லாம் தன் தந்தை மட்டும் தான். தந்தையைப் பிரிந்து செல்வது எந்த குழந்தைக்கும் பிடிக்காத ஒன்று தான். ஆனால் உயிர்பிழைக்க வேண்டுமானால் தந்தையைப் பிரிவது தான் வழி என்று குழந்தைக்கு தெரியாது. ஆனால் அது கண்ணீருடன் விடை கொடுத்த தந்தைக்கு தெரிந்திருக்கும். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, என் மகள் பத்திரமாக ஏதோ ஒரு இடத்தில் உயிரோடு இருந்தால் சரி என்று பாசத்தோடு வழி அனுப்பி வைத்திருக்கிறார் இந்த தந்தை. போர் எல்லாம் செய்ய வல்லது. அதை சரியாக செய்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+