அத்துமீறும் ரஷ்யா! அடங்க மறுக்கும் உக்ரைன்! மீண்டும் ரஷ்யாவுக்குள் சென்று தாக்குதல்! பின்னணி என்ன?
கீவ் : கடந்த சில நாட்களுக்குப் பிறகு ரஷ்யவில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு குற்றம் சாட்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெல்கோரோடில் மீண்டும் இரண்டு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோவை காரணம் காட்டி உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மிக மோசமாக மாறி வருகிறது.
வல்லரசு நாடாக கருதப்படும் பல வகைகளில் முயன்றும் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி பலனளிக்காத நிலையில், தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

உக்ரைன் போர்
ரஷ்யா தொடர்ந்து பல நாட்களாக போர்குற்றங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏறக்குறைய 4.2 மில்லியன் உக்ரேனிய அகதிகள் போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல் குற்றச்சாட்டுகள் போர்க்குற்றங்களாக விசாரிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறியுள்ளார்.

பகீர் புகார்
மரியுபோலில் இருந்து செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் மக்களை வெளியேற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடருவதாகவும், மரியுபோல் மற்றும் பெர்டியன்ஸ்கில் இருந்து மக்களை வெளியேற்ற 17 பேருந்துகள் தயார் நிலையில் இருக்கும் என செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ள நிலையில் ரஷ்யா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களை கைகளை கட்டி ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் பகீர் புகாரை உக்ரைன் கிளப்பியுள்ளது.

திட்டமிட்ட படுகொலை
உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான மைகோலைவ் மீது பல ராக்கெட்டுகளை வீசி ரஷ்யா ராணுவம் தாக்கியதாக உக்ரைன் உள்துறை அமைச்சக உதவியாளர் கூறியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகருக்கு அருகிலுள்ள புச்சா நகரில் பொதுமக்கள் கொல்லப்பட்டது "வேண்டுமென்றே செய்யப்பட்ட படுகொலை" என்று உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஞாயிற்றுக்கிழமை கூறினார். மேலும் ரஷ்ய படைகள் அப்பகுதியில் இருந்து அவசரமாக பின்வாங்கிய பின்னர் அங்கு சடலங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் தாக்குதல்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெல்கோரோடில் மீண்டும் இரண்டு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், இந்த தாக்குதலை உக்ரைன் தான் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்குப் பிறகு ரஷ்யவில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரேனியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அந்நாடு குற்றம் சாட்டிய நிலையில் மீண்டும் அங்கு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாக இரு நபர்கள் சாட்சியம் அளித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications