உயிரே போனாலும் விடமாட்டோம்! ஏவுகணை மழை பொழியும் ரஷ்யா! கார்கீவ்வை காக்க போராடும் உக்ரைன் வீரர்கள்
கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டதட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கிழக்குப் பகுதிகளில் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியிலும் கார்கீவ் நகரத்தை காப்பாற்ற உக்ரைன் வீரர்கள் வீரத்துடன் போராடி வருகின்றனர்.
ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளில் தங்கள் தாக்குதலை முடுக்கிவிட்ட நிலையில், ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், கார்கிவ் நகரைப் பிடிப்பது உக்ரைனுக்கு முக்கியமானதாக கருத்தப்படுகிறது.
இப்பகுதி ரஷ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலையில், அருகிலுள்ள மற்ற பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க், டான்பாஸ் பிராந்தியத்தின் ஒரு பகுதி முற்றிலும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் போரால் இரு நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நடத்திய பதில் தாக்குதலில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் சேதம்
மேலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள், 83 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள் மிகத் தீவிரமாக எதிர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் பெரிய அளவிலான வெற்றிகளை குவிக்கவில்லை என பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. தலைநகர் கீவ் நெருங்க முடியாத நிலையில் துறைமுக நகரமான மரியுபோல் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா கூறினாலும் பிற நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தோல்வியடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

முன்னேறும் ரஷ்யப் படைகள்
ஆனால் அதே நேரத்தில் கிழக்கு உக்ரைனில் உள்ள சிறிய நகரங்களில் நாற்பத்தி இரண்டு நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் மற்ற பகுதிகளை கைப்பற்றுவது ரஷ்யாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்றும், அந்தளவுக்கு உக்ரைன் வீரர்கள் வீரத்துடன் போராடி வருவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. எத்தனை இடர்பாடுகளை கொடுத்தாலும் சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என உக்ரைன் உறுதிபட தெரிவித்துள்ளது.

கடும் போராட்டம்
எல்லை சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலையில், ரஷ்யப் படைகள் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளன. உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய படைகள் முன்னேறுவதை தடுக்க தாங்கள் பதுங்கியுள்ள கட்டிடங்களைச் சுற்றி அகழிகளை தோண்டியுள்ளனர். ஆனாலும் கார்கிவ் மீது ரஷ்யப் படைகளின் தரைவழிப் படையெடுப்பு நின்றபாடில்லை. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் பல கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், நகரில் மின்சாரம் இல்லாததால் இருள் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications