For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200 தமிழ் அகதிகளை இலங்கையிடமே ஒப்படைக்கும் ஆஸி.. ஐ.நா. கண்டனம்

Google Oneindia Tamil News

UN decries reports Australia handing back Sri Lanka Tamil asylum seekers
சிட்னி / கொழும்பு: புகலிடம் நாடி, உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து கொண்டிருந்த 200 இலங்கைத் தமிழர்களை தடுத்து மீண்டும் இலங்கையிடமே ஆஸ்திரேலியா ஒப்படைக்கவிருப்பதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் கவலை தரும் விஷயம் என்றும் அது வர்ணித்துள்ளது.

சமீபத்தில் புகலிடம் தேடி 2 படகுகளில் 200 தமிழர்கள் இலங்கையிலிருந்து உயிரைப் பணயம் வைத்து ஆஸ்திரேலியா வந்தபோது அவர்களை வழிமறித்த ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படையினர், அவர்களை இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அனேகமாக இன்று அவர்கள் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களை நடுக்க கடலில் வைத்து இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கவும் ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இந்த செயலுக்கு உலகத் தமிழரக்ள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அதேபோல ஐ.நாவும் இதுகுறித்துக் கவலை தெரிவித்துள்ளது.

இலங்கைப் படையினரிடம் சிக்கி பாலியல் பலாத்காரம், அடி உதை, சித்திரவதை என்று கஷ்டப்பட்டு வந்த தமிழர்கள்தான் அவர்களின் பிடியிலிருந்து தப்புவதற்காக இப்படி ஆஸ்திரேலியா வருகின்றனர். ஆனால் அவர்களை மீண்டும் இலங்கைப் படையினரிடமே ஒப்படைப்பது என்பது அநியாயமானது என்று தமிழர்கள் கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் செயல் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகையில், இதுவரை எந்த ஒரு உறுதியான செய்தியும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அப்படி நடந்தால் அது மிகவும் கவலைக்குரியதாகும்.

சர்வதேச சட்டங்களின்படி எந்த ஒரு புகலிடம் தேடி வருபவரையும் கட்டாயப்படுத்தி அவர்களது நாட்டுக்கே அனுப்ப முடியாது, அனுப்பவும் கூடாது. இதை ஆஸ்திரேலியா உணர வேண்டும் என்றனர்.

கடந்த ஆண்டில் முதல் 7 மாதங்களில் மட்டும் 220 படகுகள் மூலம் 16,000 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக ஆஸ்திரேலியா போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The United Nations has expressed "profound concern" about Australia's handling of asylum seekers amid reports that scores of Sri Lankans will be handed over to their country's navy after only a brief assessment by Australian authorities. Two boats carrying more than 200 Tamil asylum seekers from Sri Lanka were intercepted by Australian border security forces in the Indian Ocean in recent days and either have been or will be transferred to the Sri Lankan navy, Australian media said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X