For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர் குடியுங்கள், உடல் நலத்தைப் பேணுங்கள்.. அமெரிக்கர்களுக்கு மிஷல் கோரிக்கை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நிறைய தண்ணீர் குடியுங்கள். உடல் நலத்தைப் பேணுங்கள் என்று அமெரிக்கர்களுக்கு அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷல் கோரிக்கை விடுத்துள்ளார்.

"Drink Up" என்ற பெயரில் இதற்காக ஒரு பிரசாரத்தையும் அவர் தொடங்கியுள்ளார்.

அதிக அளவில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் அவர் விளக்கியுள்ளார்.

குழந்தைகள் - பெரியவர்களுக்காக

குழந்தைகள் - பெரியவர்களுக்காக

இந்த சுகாதாரப் பிரசாரத்தை குழந்தைள் மற்றும் பெரியவர்களைக மனதில் கொண்டு தொடங்கியுள்ளார் மிஷல்.

நல்ல குடும்பம்.. பல்கலைக்கழகம்

நல்ல குடும்பம்.. பல்கலைக்கழகம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது குடும்பத்தினரின் உடல் நலத்தைப் பேணுவதில் நமக்கு முக்கியப் பங்குண்டு. நாமும் நன்றாக இருக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்குத் தண்ணீரை போதுமான அளவில் குடிப்பது அவசியம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

நிறைய தண்ணீர் குடியுங்கள்

உடல் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு எளிமையான வழிதான் தண்ணீர் அருந்துவது. நிறைய தண்ணீர் குடியுங்கள். உடம்பு சீராக இருக்கும். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும். நிச்சயம் உங்களுக்குள் நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

உங்களையே நேசிப்பீர்கள்

உங்களையே நேசிப்பீர்கள்

தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பதால் உங்களையே நீங்கள் நேசிக்கும் அளவுக்கு நல்ல உடல் நலத்தை காண்பீர்கள். எனவே தவறாமல் தண்ணீர் அருந்துங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

தனியாக இணையதளமும்

தனியாக இணையதளமும்

இந்த பிரசாரத்திற்காக youarewhatyoudrink.org என்ற பெயரில் தனியாக இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

பாதிப் பேர் தண்ணீரே குடிப்பதில்லையாம்

பாதிப் பேர் தண்ணீரே குடிப்பதில்லையாம்

அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஒரு நாளைக்கு குடிக்க வேண்டிய சராசரி அளவுக்குக் கூட தண்ணீர் குடிப்பதில்லையாம். மேலும் 25 சதவீத
குழந்தைகள் தேவைக்கும் மிகக் குறைவாகவே தண்ணீர் குடிக்கிறார்களாம்.

English summary
As part of her efforts to make Americans stay healthier, US First Lady Michelle Obama has launched a nationwide campaign, asking people to "Drink Up". "Since we started the Let's Move! initiative, I've been looking for as many ways as possible to help families and kids lead healthier lives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X