For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய பிரதமர் ப்ளூட் வாசிக்கிறார், டிரம்ஸ் வாசிக்கிறாரே: வியக்கும் ஜப்பானியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி ப்ளூட் வாசித்ததோடு மட்டும் அல்லாமல் டிரம்ஸும் வாசித்து அந்நாட்டு மக்களை அசத்தியுள்ளார்.

5 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை ஜப்பான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. முதல் இரண்டு நாட்கள் கோவில் நகரமான கியோட்டோவில் தங்கிய அவர் திங்கட்கிழமை டோக்கியோ சென்றார்.

டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அகாடமி துவக்க விழாவில் கலந்து கொண்டு அதை துவக்கி வைத்தார் மோடி.

டிசிஎஸ்

டிசிஎஸ்

டிசிஎஸ் தனது நிறுவனத்தில் பணிபுரியும் இளம் ஜப்பான் ஊழியர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் குறித்து பயிற்சி அளிக்க தான் இந்த அகாடமியை துவங்கியுள்ளது.

டாய்கோ டிரம்ஸ்

டாய்கோ டிரம்ஸ்

அகாடமி துவக்க விழாவில் ஜப்பானைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் அந்நாட்டின் பாரம்பரிய டிரம்மான டாய்கோவை வாசித்தனர். இதை பார்த்த மோடிக்கும் டிரம்ஸ் வாசிக்கும் ஆசை ஏற்பட்டது.

மோடி

மோடி

பெண் கலைஞர் வாசித்த டிரம்ஸை வாங்கிய மோடி அந்த ஆண் கலைஞருடன் சேர்ந்து அதை வாசித்தார். அவர் வாசித்து முடித்த உடன் அங்கிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

ப்ளூட்

ப்ளூட்

முன்னதாக டோக்கியோவில் உள்ள தைமெய் துவக்கப் பள்ளிக்கு சென்ற மோடி அங்கு மாணவ, மாணவியர் மத்தியில் ப்ளூட் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Narendra Modi who is touring in Japan played drums at a function in Tokyo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X