For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இழிவான நோக்கம்.. சுயநலமான, பாசாங்குத்தனம்.. அறுவறுப்பான காரியம்.. அமெரிக்காவை வறுத்தெடுத்த சீனா

Google Oneindia Tamil News

நய்பிய்டா: சீனாவின் அதிகாரத்தை கட்டுப்படுத்த அருவருப்பான காரியங்களை அமெரிக்காவின் ஏஜென்ஸிகள் செய்து வருவதாக சீனா கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது.

Recommended Video

    India கொடுத்த தைரியம்.. திரும்பி வந்த America.. China- க்கு ஷாக்

    சீனா மற்றும் அமெரிக்கா இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. சீனா-மியான்மர் உறவுகளை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியிருந்தது. இந்த அறிக்கைக்கு பதிலளித்த அமெரிக்கா உலகளாவிய சுற்றுப்பயணத்தின் மற்றொரு கேலிக்கூத்து" என்றும் "சுயநல அரசியல் ஆதாயங்களை நாடுவதை" நோக்கமாகக் சீனா கொண்டுள்ளது என்றும் கூறியது.

    மியான்மரை சீனா ஆட்டுவிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. மியான்மரில் பெரும் முதலீட்டுத் திட்டங்களை சீனா செயல்படுத்துவது என்பது, வளங்கள் நிறைந்த மியான்மர் தேசத்தில், தனது தேவைகளை நிறைவேற்றுவதற்கான சீனாவின் அரசியல் உத்தி என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

    ரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி! ரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி!

    சீனா உதவி

    சீனா உதவி

    தைவானை உள்ளடக்கிய சீனாவுக்கு மியான்மர் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதால், சீனா மியான்மரில் செல்வாக்கை நிலைநாட்ட தெளிவான இலக்குடன், சீனா தான் மியான்மரின் "ஒரே உண்மையான நண்பர்" என்று திட்டங்களை முன்வைத்துள்ளது என்று அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    தலையிடுகிறது

    தலையிடுகிறது

    இதனிடையே மியான்மரில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சிறிய தீவு நாடுகளின் இறையாண்மைக்குள் சீனா தலையிடுகிறது. தென் சீனக் கடலின் வளங்கள் நிறைந்த பிராந்தியத்தில் அதன் இராணுவத்தை குவித்தி மிரட்டுகிறது என்று குற்றம்சாட்டியது. மேலும் ஹாங்காங்கில் சீனாவின் தேசிய பாதுகாப்புச் சட்டங்களை விமர்சித்த அமெரிக்க தூதரகம், "சீனா அண்டை நாடுகளின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த பெரிய பெரிய திட்டங்களுக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டியது.

    உறவில் விரிசல் வரும்

    உறவில் விரிசல் வரும்

    இதற்கு பதிலடியாக மியான்மரில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், தென் சீனக் கடல் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் விவகாரங்களில் அமெரிக்கா மூர்க்கதனமாக மிரட்டுகிறது. இப்படி செய்வது தென் சீனக் கடல் மற்றும் ஹாங்காங் விஷயத்தில் உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தி விடும்.

    இழிவான நோக்கங்கள்

    இழிவான நோக்கங்கள்

    அமெரிக்கா "சுயநலமான, பாசாங்குத்தனமான, இழிவான நோக்கங்களுடன் செயல்படுகிறது. சீனாவின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க ஏஜென்சிகள் "அருவருப்பான காரியங்களை செய்கின்றன" என்று குற்றம்சாட்டி உள்ளது.

    English summary
    US-China Embassies Get Into A War Of Words Over South China Sea, Hong Kong. the Chinese embassy lashed out at the United States and accused it of "selfish, hypocritical, contemptible" motives. The Chinese side also accused US agencies abroad of doing "disgusting things" to contain China's authority.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X