பன்றி இறைச்சி கட்டுப்படியாகவில்லை.. பரம எதிரி அமெரிக்காவிடம் மாட்டிறைச்சிக்காக கைகோர்க்கும் சீனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் பிரதான உணவான பன்றி இறைச்சியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் மாட்டிறைச்சி மோகம் தலைதூக்கி வருகிறது. பரம எதிரியாக கருதும் அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சியை சீனா இறக்குமதி செய்வது கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

உலகிலேயே பன்றி இறைச்சியை அதிகம் சாப்பிடும் நாடுகளில் சீனாவும் ஒன்று. சீனாவில் 50.4% பேர் பன்றி இறைச்சி சாப்பிடுகிறவர்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பன்றி இறைச்சிக்கு சீனாவில் கடும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.

என்னதான் பன்றி பண்ணைகள் பெருகிக் கொண்டே இருந்தாலும் இறைச்சி தட்டுப்பாடு தவிர்க்க முடியாமல் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.

அமெரிக்கா மாட்டிறைச்சி

அமெரிக்கா மாட்டிறைச்சி

இதனால் மெல்ல மெல்ல மாட்டிறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை விஸ்வரூபமெடுத்தது. அதுவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சியை சீனர்கள் தேடித் தேடி வாங்கி சாப்பிடுகின்றனர்.

அமெரிக்கா மகிழ்ச்சி

அமெரிக்கா மகிழ்ச்சி

கடந்த ஆண்டு மட்டும் 2.6 பில்லியன் டாலர் அளவுக்கு மாட்டிறைச்சியை சீனா இறக்குமதி செய்திருப்பது கண்டு அமெரிக்கா அகம் மகிழ்ந்து போனது. ஏனெனில் 14 ஆண்டுகளாக அமெரிக்காவின் மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா நிறுத்தி வைத்திருந்தது.

வாங்கி குவிக்கும் சீனா

வாங்கி குவிக்கும் சீனா

நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் இறைச்சியை சீனாவுக்கு அமெரிக்கா அனுப்புகிறது என அப்போது பரபரப்பு குற்றம்சாட்டப்பட்டது. இப்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் சந்தடி சாக்கில் அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சியை வாங்கி குவிக்கிறது சீனா.

அமெரிக்காவுடன் கை கோர்ப்பு

அமெரிக்காவுடன் கை கோர்ப்பு

இதுபோதாதா அமெரிக்காவுக்கு? இப்போது சீனாவுக்கான மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தை முனைப்புடன் செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்காவில் மாட்டிறைச்சி விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்படுகிறது.

இந்தியாவும் பிற நாடுகளும்

இந்தியாவும் பிற நாடுகளும்

இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து சட்டம் போடுகிறோம்.. அமெரிக்காவும் சீனாவும் பரம எதிரிகளாக இருந்தாலும் மாட்டிறைச்சிக்காக கை கோர்க்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The world's largest pork producer China has seen beef demand climb.
Please Wait while comments are loading...