For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துப்பாக்கியுடன் பெண் நுழைந்ததாக பரபரப்பு.. தீவிர சோதனைக்கு பின் அமெரிக்கா நாடாளுமன்றம் திறப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: துப்பாக்கியுடன் பெண் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததாக பரவிய வதந்தியால் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாடாளுமன்ற கதவுகள் மூடப்பட்டன. விரைந்து வந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 US Capitol on lockdown, police search for woman

சோதனையில் அங்கு யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சோதனையால் சுமார் 40 நிமிடம் அதிகாரிகள், பார்வையாளர் அந்த பகுதிகுள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து மீண்டும் நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக அமெரிக்காவின் லூசியாணா, மினசோட்டா மாகாணங்களில் இரு வேறு சம்பவங்களில் கருப்பின இளைஞர்கள் இருவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளை கண்டித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
The US Capitol building in Washington, D.C., is on lockdown on Friday out of an abundance of caution due to police activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X