For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒபாமாவுடன் மோதல்- அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்ஹேகல் திடீர் ராஜினாமா!

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான கருத்து வேறுபாட்டால் அந்நாட்டு ராணுவ அமைச்சர் சக் ஹேகல் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, சக் ஹேகல் மீது அமெரிக்க அதிபர் ஒபாமா அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

US defence secretary Chuck Hagel resigns

ஒபாமாவின் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணுகுமுறையில் சக்ஹேகலும் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததாகவும் இதனால் அவர் எந்த நேரத்திலும் தமது பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் கடந்த பல வாரங்களாக அதிபர் ஒபாமாவுடன் நீடித்த ஆலோசனைகளின இறுதியில், சக் ஹேகல் நேற்று பதவி விலகினார். ஒபாமா அரசின் 3-வது ராணுவ அமைச்சர் இவர்.

மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை, சக் ஹேகல் பதவியில் நீடிப்பார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவின் அரசில், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரே அமைச்சராக இருந்தவர் சக் ஹேகல் என்பது குறிப்பிடத்தக்கது..

English summary
Chuck Hagel has resigned as US defence secretary after less than two years in the top post. President Barack Obama confirmed his resignation and paid tribute to his "class and integrity".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X