அமெரிக்காவில் சீட்டுக்கட்டு போல சரிந்த 12 மாடி குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கிய 99 பேர் மீட்பு
அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மியாமி: அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கவே மீட்புப்பணிகளில் சிரமம் ஏற்பட்டது. முதல் கட்டமாக அவர்கள் 12 வயது சிறுவன் உள்பட 99க்கும் மேற்பட்டோரை மீட்டனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செய்தியாளர்களிடம் பேசிய மியாமி-டேட் தீயணைப்புத் தலைவர் ஆலன் கொமின்ஸ்கி, இரவு முழுவதும் மீட்புப்பணிகள் நடைபெற்றதாகவும் வெள்ளிக்கிழமைகளில் குழுவினர் பணியாற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications