இஸ்ரேல் மாதிரியே.. மத்திய கிழக்கிலும் அயன்டோம் இருக்கு! ஈரான் தாக்குதல் முழு சேதத்தை ஏற்படுத்துமா?
தோஹா: கத்தார், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. ஆனால், இஸ்ரேலிடம் உள்ள அயன்டோம் ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பத்தை போலவே, மத்திய கிழக்கு நாடுகளும் ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால், அமெரிக்க தளங்கள் பாதிப்பை குறைவாகத்தான் எதிர்கொள்ளும் என்று சொல்லப்படுகிறது.
கத்தார், பஹ்ரைன், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ படைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க படைகள் உஷார் அடைந்துள்ளன. ஆனால் இந்த தாக்குதல்கள் 100% வெற்றிப்பெறாது.

ஏனெனில் அமெரிக்க ராணுவ தளங்களை பேட்ரியாட், தாட் உள்ளிட்ட ஏவுகணை இடைமறிப்பு தொழில்நுட்பங்கள் பாதுகாக்கின்றன. முதலில் பேட்ரியாட் அமைப்பு குறித்து பார்ப்போம். இவை குறுகிய, நடுத்தர தூர ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் போன்ற அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் திறன் கொண்டவை. சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களில் இவை நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
தாட் அமைப்பை பொறுத்தவரை, இவை அதிக உயரத்திலும், வளிமண்டலத்திற்கு வெளியேயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க வடிவமைக்கப்பட்டவை. சவுதி அரேபியா போன்ற முக்கிய இடங்களில் THAAD அமைப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
மூன்றாவதாக இருப்பவை ஏஜிஸ் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (Aegis Ballistic Missile Defense - BMD) அமைப்புகள். இவை கடற்படை கப்பல்களில் பொருத்தப்பட்டிருக்கும் அமைப்புகள். இவை பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க கடற்படை கப்பல்களில் உள்ளன, மேலும் இவை பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை. ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்க கடற்படை கப்பல்கள் இஸ்ரேலுக்கான ஏவுகணைகளை இடைமறிக்க SM-3 இன்டர்செப்டர்களைப் பயன்படுத்தின.
இஸ்ரேலை எப்படி அயன்டோம் பாதுகாத்ததோ, அதேபோல அமெரிக்க ராணுவ தளங்களை இது பாதுகாக்கிறது. மத்திய கிழக்கில்
கத்தார் - அல் உதேய்த் விமானப்படைத் தளம்
குவைத் - கேம்ப் அரிப்ஜான்
பஹ்ரைன் - அமெரிக்க கடற்படை கடற்படை
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) - அல் தஃப்ரா விமானப்படைத் தளம்
ஆகிய அமெரிக்க ராணுவத தளங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications