டிரம்பிடம் பணிந்த சீனா? ஹார்முஸில் அமெரிக்க கடற்படை செய்த மெகா சம்பவம்! ஜலசந்தியில் பதற்றம்!
தெஹ்ரான்: "யார் தடுத்தாலும் வருவேன்!" என்று நேற்று சவால் விட்ட சீனக் கப்பல், இன்று அமெரிக்காவின் பிடிவாதத்திற்கு முன்னால் பணிந்து பின்வாங்கியிருக்கிறது. அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடையை மீற முயன்ற 'ரிச் ஸ்டாரி' கப்பல், மீண்டும் ஜலசந்திக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. உலகத்தையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வளைகுடாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய போர், ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இன்னுமே போர் நிரந்தரமாக முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் மோதல் வெடிக்கும் என்ற ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

முடக்கிய அமெரிக்கா
பாகிஸ்தான் நடந்த அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானைச் சுற்றி அமெரிக்கக் கடற்படை நிறுத்தப்படும் என்றும் எந்த கப்பலும் ஹார்முஸை கடக்க அனுமதிக்கப்படாது என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தச் சூழலில் தான் சீன கப்பல் தொடர்பாக இப்படி இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் தடையை மீறி சீன கப்பல் ஒன்று ஜலசந்தியைக் கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது.. அமெரிக்கக் கப்பல்களைத் தாண்டி அந்த கப்பல் ஜலசந்தியை கடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்த கப்பல் ஜலசந்தியை கடக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சீனாவைச் சேர்ந்த அந்த 'ரிச் ஸ்டாரி' என்ற கப்பல் புதன்கிழமை மீண்டும் வளைகுடா பகுதிக்கே திரும்பியுள்ளது.
சீன கப்பல்
இது தொடர்பாக அமெரிக்க மத்திய கமாண்ட் (CENTCOM) தனது ட்விட்டரில், "முதல் 24 மணிநேரத்தில் ஒரு கப்பல் கூட எங்களைத் தாண்டிச் செல்லவில்லை" என்று கூறியுள்ளது. தடையை மீற முயன்ற 6 கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மீண்டும் ஈரான் துறைமுகங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலம் சீன கப்பல் ஹார்முஸை கடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் சுவான்ரன் ஷிப்பிங் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த 'ரிச் ஸ்டாரி' கப்பலில் சுமார் 2.5 லட்சம் பீப்பாய்கள் மெத்தனால் உள்ளது. இது தடையை மீற முயன்று தோற்றுப்போயுள்ளது. மற்றொரு பக்கம், 'அலிசியா' (Alicia) என்கிற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல் தற்போது ஜலசந்தி வழியாக வளைகுடாவுக்குள் நுழைகிறது. இது ஈரானுக்குச் செல்லாமல், ஈராக்கில் எண்ணெய் ஏற்றுவதற்காகச் செல்கிறது என்பதால் அமெரிக்கா இதை அனுமதித்துள்ளது.
130 கப்பல்கள்
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பு ஈரானுடன் போரைத் தொடங்கியதற்கு முன்பு வரை, இந்த ஜலசந்தி வழியாகத் தினமும் 130-க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கும். ஆனால், இப்போது அந்தப் பகுதி போர்க்களமாக மாறியிருப்பதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே பயத்துடன் வலம் வருகின்றன. அதுவும் இப்போது அமெரிக்கா ஈரான் செல்லும் அனைத்து கப்பல்களையும் முடக்கியுள்ளதால் ஓரிரு கப்பல்களே அங்குச் செல்கிறது.
தற்போதைய நிலவரம்
சபாஹர் துறைமுகத்தைப் பொறுத்தவரை ஈரான் அருகில் உள்ள இந்தத் துறைமுகத்திலிருந்து வெளியேற முயன்ற 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தடுத்து நிறுத்தியுள்ளன. ஏற்கனவே போர்ப் பதற்றம் காரணமாகக் கப்பல்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் எகிறியுள்ளது. இது உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
-
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
ஈரானிடம் அணு ஆயுதத்தை விட மோசமான புதிய ஆயுதம்.. அமெரிக்க உளவுத்துறை வார்னிங்! -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
ராஜா மாதிரி மீண்டும் தலையெடுக்கும் ஈரான்.. ஹார்மூஸ் வழியாக 3 ஈரானிய கப்பல் 'அவுட்'! -
இஸ்ரேல் தேரை இழுத்து தெருவில் விட்டது.. லெபனான் மீது 84 முறை தாக்குதல்.. ஈரான் உச்சக்கட்ட கோபம்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications