அமெரிக்க அதிபர் தேர்தல்: உலகின் காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, சீனா,ரஷ்யா காரணமாம்.. சொல்வது டிரம்ப்
வடகரோலினா: உலக அளவில் காற்று மாசுபாட்டிற்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சியின் வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் - ஜோ பைடன் இடையே உச்சகட்ட போட்டி நிலவுகிறது.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஜோ பிடனுக்கு ஆதரவாக இருப்பதாக் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இதனிடையே வடகரோலினா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம் பேசுகையில் இந்தியாவை சீண்டிப் பார்த்தார்.
டிரம்ப் பேசுகையில், உலகளாவிய காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள்தான் காரணம். பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் இந்தியா, சீனா நாடுகளே அதிக லாபம் அடைகின்றன. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எரிபொருள் உற்பத்தி துறைக்கு தடையாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications