For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈராக்கில் இருந்த பக்கா சிறையில் அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவாகிய ஐஎஸ்ஐஎஸ்

By Siva
Google Oneindia Tamil News

பாக்தாத்: ஈராக்கில் இருந்த அமெரிக்க சிறையான பக்காவில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் தான் விடுதலையான பிறகு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியவர்கள்.

ஈராக்கில் இருந்த அமெரிக்க சிறையான பக்காவில் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அந்த சிறையில் இருந்து விடுதலையான பலர் தீவிரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர்.

அந்த சிறையில் இருந்தவர்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பாக்தாதியும் அடக்கம்.

சிறை

சிறை

சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பாதுகாவலர்கள் ஆண்களுக்கான மேக்சிம் பத்திரிக்கையை அளித்து அதை பார்க்குமாறு கூறியுள்ளனர். அதை பார்க்க மறுத்தவர்களை பயங்கரவாதிகள் என கருதி அவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

திட்டம்

திட்டம்

ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்ட பயங்கரவாதிகள் எல்லாம் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்க பொறுமையாக திட்டமிட்டுள்ளனர். சிறையில் திட்டம் தீட்டியவர்கள் விடுதலையான பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

பாக்தாதி

பாக்தாதி

அல் பாக்தாதி பக்கா சிறையில் 10 மாதங்கள் இருந்தார். அவரின் நன்னடத்தை காரணமாக அவர் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். அவரால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்கா நினைத்தது.

கேங்

கேங்

பல இடங்களில் இருந்து வந்த தீவிரவாதிகளை ஒரு இடத்தில் அடைத்து வைத்ததால் அவர்கள் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டினர். அந்த சிறையை பாதுகாத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு அரபு மொழி தெரியாததால் தீவிரவாதிகள் தங்கள் இஷ்டம் போன்று அரபியில் பேசி தீவிரவாத அமைப்பை உருவாக்க ஆலோசனை நடத்தினர். அமெரிக்கா அது அறியாமலேயே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு உருவாக காரணமாகியுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

பக்கா சிறையில் இருந்த காலம் அருமையான அனுபவம் அதை ஒருபோதும் மறக்க முடியாது. நாங்கள் நிதானமாக திட்டமிட எங்களுக்கு அப்போது நிறைய நேரம் இருந்தது என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு அகமது தெரிவித்துள்ளார்.

English summary
The US prison camp in Iraq has accidentally formed the world's notorious terror group ISIS by lodging extremists in one place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X