இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சித்தால் அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தனது இறையாண்மையையும், சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.

Vladimir Putin Warns Against Pressuring India Through Sanctions Says It Will Backfire

அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கை?

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் (SPIEF) புதின் கூறியதாவது: "இந்தியா எப்போதும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாகவே செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா மீது விதிக்கப்படும் எந்தவொரு தடையும் உடனடியாக எதிர்விளைவையே ஏற்படுத்தும்" என்றார்.

இந்தியா மீது கடுமையான வரி விதிப்பை அமெரிக்கா சமீப காலமாக விதிக்கத் தொடங்கி வரும் நிலையில், புதினின் எச்சரிக்கை சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்காவுக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கையாகவே புதினின் இந்த பேச்சு இருப்பதாகவும் சர்வதேச நோக்கர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

புதின் கூறியது என்ன?

மேலும், புதின் எஸ்.யு.-57 போர் விமானத் திட்டம் பற்றியும் பேசினார். இது குறித்து புதின் பேசுகையில், "எஸ்.யு.-57 மிகவும் சிறந்த விமானம். தற்போதைய சூழலில் உலகிலேயே மிகவும் நவீனமான மற்றும் மேம்பட்ட போர் விமானமாக அது இருக்கும். இந்த திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து செயல்படுத்த நாங்கள் முன்மொழிந்தோம். அது சாத்தியமாகவில்லை. எனவே நாங்களே அதை உருவாக்கினோம். தற்போது எஸ்.யு.-57 விமானத்தை விற்பனை செய்யவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

எஸ்.யு.-57 போர் விமானம் அல்லது எஸ்.-500 வான் பாதுகாப்பு அமைப்பு போன்ற ரஷ்ய பாதுகாப்பு தளவாடங்களை வாங்கினால், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் அல்லது அழுத்தங்களை இந்தியா எதிர்கொள்ள நேரிடுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த புதின், "இந்தியா எப்போதும் தனது தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றி வருகிறது. வெளிநாட்டு அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப முடிவுகளை எடுத்து வருகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+