For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.3 ரிக்டர் ஆக பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரானில் மலைப்பகுதியில், 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 500 கீ.மி. தொலைவில் உள்ள நர்முரியில் என்ற மலைப்பகுதியில் இன்று காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் கடந்த 2003- ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26,000 பேர் பலியாகினர். வரலாற்றில் மிகப் பெரிய அழிவாக பார்க்கப்பட்ட இந்த நிலநடுக்கத்தில் அந்நாட்டின் தென்கிழக்கில் உள்ள பாம் என்ற நகரமே அழிந்து போனது குறிப்பிடத்தக்கது.

English summary
An earthquake of magnitude 6.3 struck western Iran on Monday, near the provincial capital of Dezful, about 300 miles (480 km) from Tehran, the capital, the U.S. Geological Survey said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X