For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா ஐஐடி, இஸ்ரோக்களையும், பாகிஸ்தான் தீவிரவாதிகளையும் உருவாக்குகிறது: ஐ.நா.வில் சுஷ்மா விளாசல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கிவரும் நிலையில், பாகிஸ்தானோ, தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச்சபையின் 72வது ஆண்டு கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதில் பங்கேற்று இன்று பேசியதாவது:

What have you produced? You have produced terrorists: EAM Sushma Swaraj on Pakistan

தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது, பாகிஸ்தான், தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளித்து வருகிறது. உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவலாக உள்ளது. வறுமையை ஒழிக்க இந்தியா போராடி வருகிறது. ஆனால் பாகிஸ்தான், இந்தியாவுடன் போராடி வருகிறது.

நாங்கள் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், இஸ்ரோ, இன்ஜினியர்கள், டாக்டர்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் பாகிஸ்தான், லஷ்கர் இ-தொய்பா, ஜெய்ஷ்இமுகமது, தீவிரவாத முகாம்கள் மற்றும் ஜிகாதிகளை உருவாக்குகிறார்கள். இவ்வாறு சுஷ்மா சுவராஜ் பேசினார்.

சுஷ்மாவின் பேச்சுக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

English summary
We produced scholars, doctors, engineers. What have you produced? You have produced terrorists: EAM Sushma Swaraj on Pakistan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X