ரஷ்யாவிற்கு ஆப்பு! அமெரிக்கா, ஜெர்மனி வைக்க போகும் "பெரிய" செக்.. ஆனால்.. இந்தியாவிற்கும் சிக்கல்!
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த நாடு பல்வேறு பொருளாதார தடைகளை, உலக நாடுகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன.
Recommended Video
உலக நாடுகளின் இந்த முடிவு பற்றி பார்க்கும் முன் SWIFT தளம் பற்றி பார்க்கலாம். இது உலக நாடுகளுக்கு இடையே பண பரிவர்த்தனை செய்யும் அமைப்பு ஆகும். ஆனால் நெட் பேங்கிங்கில் நாம் பரிவர்த்தனை செய்வது போல அல்லாமல் இது வேறு வகையில் செயல்பட கூடியது.
ஒரு நாட்டின் வங்கியில் இருந்து இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் பரிவர்த்தனை செய்யப்படும் போது அதை உறுதி செய்யும் மெசேஜிங் தளமாக இது செயல்படும். ஒரு நாட்டின் வங்கி இன்னொரு நாட்டு வங்கிக்கு பணம் அனுப்பவதும் இந்த SWIFT தளம் மூலமே உறுதி செய்யப்படும்.

SWIFT என்றால் என்ன?
SWIFT தளம் இன்றி சர்வதேச அளவில் வங்கிகள் பரிவர்த்தனை மேற்கொள்வது மிக கடினம். உலக அளவில் நம்பப்படும் சர்வதேச, பாதுகாப்பான பரிவர்த்தனை SWIFTதான். மிக மிக பாதுகாப்பானது இது. 1970களில் இருந்து SWIFT பயன்பாட்டில் இருக்கிறது. பெல்ஜியத்தை சேர்ந்த கோ ஆப்பரேட்டிவ் வங்கிகள் உருவாக்கிய இந்த SWIFT தளம் தற்போது சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகளால் பயன்படுத்தப்படுகிறது.

SWIFT ஏன் முக்கியம்?
11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கிகள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறது. 300க்கும் மேற்பட்ட ரஷ்ய வங்கிகள், ரஷ்ய நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவை SWIFT சேவையில் இருந்து தடை செய்ய ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் இந்த முடிவிற்கு பரிந்துரை செய்துள்ளன. விரைவில் SWIFT தளத்தில் இருந்து ரஷ்யா அதிகாரபூர்வமாக நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யா SWIFT
இப்படி நடக்கும் பட்சத்தில் அது ரஷ்யாவிற்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் SWIFT மூலம் பல டிரில்லியன் டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதில் ரஷ்யாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதி, ஆயுத ஏற்றுமதி, தானிய ஏற்றுமதி அனைத்திற்கும் SWIFT தளத்தையே நம்பி இருக்கிறது. இதனால் மொத்தமாக ரஷ்யாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா தடை
உக்ரைன் போரால் உலக நாடுகளின் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை இது வெகுவாக பாதிக்கும். 2012ல் சில ஈரான் வங்கிகள் SWIFT தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் அவர்களின் எண்ணெய் ஏற்றுமதி 30 சதவிகிதம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா இதில் முழுமையான தடையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யா உக்ரைன் போர்
அந்த நாட்டின் ஜிடிபியை SWIFT தடை பெரிய அளவில் பாதிக்கும். முக்கியமாக எண்ணெய் ஏற்றுமதியை முடக்கி போடும். அதே சமயம் ரஷ்யாவை எண்ணெக்கும், ஆயுதத்திற்கும் நம்பி இருக்கும் ஜெர்மனி, ஐரோப்பா நாடுகளும் பாதிக்கப்படும். ஆனாலும் இந்த நாடுகளை ரஷ்யாவை தனிமை படுத்துவதற்காக இந்த தியாகத்திற்கு தயாராகி உள்ளது. ரஷ்யா மீதான SWIFT தடை இந்தியாவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா பல்வேறு விஷயங்களில் ரஷ்யாவை நம்பி இருக்கிறது.

இந்தியா பாதிப்பு
முக்கியமாக எண்ணெய், ஆயுத இறக்குமதியை இந்தியா ரஷ்யாவில் இருந்தே செய்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் 9.4 பில்லியன் டாலர் வர்த்தகம் ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. இதில் 90 சதவிகிதம் SWIFT மூலமே நடக்கிறது. ரஷ்யா SWIFT தடை பெற்றால் இந்தியாவையும் அது பாதிக்கும். முக்கியமாக இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி, எஸ் 400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம், AK-203 போன்ற பாதுகாப்பு கருவிகளின் இறக்குமதியும் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications