"தடுக்கவே முடியாது.." நிமிடத்திற்கு 25,000 பேருக்கு கொரோனா! திணறும் சீனா! நிலைமை கைமீற என்ன காரணம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த திடீர் கொரோனா அலைக்கு அந்நாட்டு அரசே முக்கிய காரணம். கடந்த வாரம் ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு, அதாவது நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்ற விகிதத்தில் வைரஸ் பாதிப்பு பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு உலகெங்கும் கடந்த சில காலமாகவே மெல்லக் குறைந்து வந்தது. இதனால் நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தோம். சீனாவிலும் கூட இத்தனை காலம் கொரோனா கட்டுக்குள் தான் இருந்து வந்தது.

இந்தச் சூழலில் தான் திடீரென அங்கு நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இதையடுத்து யாருமே எதிர்பார்க்காத வகையில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.

சீனா

சீனா

அங்கு இத்தனை காலம் ஜீரோ கோவிட் பாலிசி இருந்தது. அதாவது யாருக்காவது ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் கூட, அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதேபோல கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். இப்படி கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால், அங்கு கொரோனா இத்தனை காலம் பெரியளவில் பரவாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் அங்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக ஜீரோ கோவிட் பாலிசி நீக்கப்பட்டன. இதனால் அங்கு வைரஸ் பாதிப்பு மளமளவென அதிகரிக்கத் தொடங்கியது.

20 லட்சம் உயிரிழப்புகள்

20 லட்சம் உயிரிழப்புகள்

இதனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் அங்கு கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இது அங்குள்ள சுகாதார கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 10 முதல் 20 லட்சம் பேர் அங்கு கொரோனாவால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அங்கு மளமளவென கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த வாரம் வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாங் வென்ஹாங் என்பவரும் ஒரே வாரத்தில் அங்கு கொரோனா உச்சம் தொடும் என எச்சரித்துள்ளார்.

தவிர்க்க முடியாது

தவிர்க்க முடியாது


மேலும், அவர் கூறுகையில், "கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருவதால், ஏற்படும் சீரியசான பாதிப்புகளும் அதிகரித்துள்ளது. இது மருத்துவ கட்டமைப்பிலும் அழுத்தத்தை அதிகரித்துள்ளது.. அடுத்த இரு மாதங்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும்.. கொரோனா பரவலைத் தவிர்க்க முடியாது என்பதை ஒப்புக் கொண்டு நாம் அதற்குத் தயாராக வேண்டும்" என்றார். அங்கு அதிகாரப்பூர்வ தகவல் 4000 கீழாக கொரோனா பாதிப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமே அது கொரோனா டெஸ்டிங்கை பெரியளவில் நிறுத்திவிட்டது. ஆனால், மருத்துவர்களைப் பார்த்தால் உண்மை நிலவரம் புரியும்.

ரொம்பவே மோசம்

ரொம்பவே மோசம்

அங்கு இப்போது சராசரியாகத் தினசரி 4 முதல் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாக அங்குள்ள அதிகாரிகளே கூறுகின்றனர். வரும் நாட்களில் இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் தினசரி 10% வரை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.. பிரிட்டன் நிறுவனமான ஏர்பினிட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கணிப்பை வெளியிட்டது. அதில் சீனாவில் ஒரு நாளைக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்றும் தினசரி 5,000க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ளது. இவை அனைத்தும் சீனாவுக்கு அச்சத்தைத் தருவதாகவே உள்ளது.

நிமிடத்திற்கு 25,000 பேர்

நிமிடத்திற்கு 25,000 பேர்

உண்மையில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த வாரம் ஒரே நாளில் சீனாவில் கிட்டத்தட்ட 37 மில்லியன் பேருக்கு அதாவது, 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது. அதாவது நிமிடத்திற்கு 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு பரவுவதாகக் கூறியுள்ளது. சீனாவின் பொருளாதார தலைநகராக அறியப்படும் ஷாங்காயிலும் நிலைமை ரொம்பவே மோசம். 2.5 கோடி மக்களைக் கொண்ட ஷாங்காயில் வெறும் ஒரே வாரத்தில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு, அதாவது 1.25 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழப்புகள்

உயிரிழப்புகள்

மேலும், அங்கு ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மிகக் குறைந்த கொரோனா உயிரிழப்புகளே உள்ளன. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா உயிரிழப்பு என்றால் என்ன என்பதைச் சீனா வித்தியாசமாக விளக்கியுள்ளது. வேண்டுமென்றே கொரோனா உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகச் சீனா இந்த முறையைப் பின்பற்றுகிறது. இதற்கு உலகெங்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், சீனா இதைத் தொடர்ந்து செய்கிறது.

காரணம்

காரணம்

இதனால் கொரோனா வேக்சின் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வேக்சின் பணிகள் முன்பை காட்டிலும் 10 மடங்கு வேகப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்படுகிறது. சீனாவில் மொத்தம் 90% பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 60% பேர் பூஸ்ட்ர் டோஸ் எடுத்துள்ளனர். இது அதிகம் என்பதைப் போலத் தெரிந்தாலும், சீனாவின் சினோபார்ம் சினோவார்க் வேக்சின் தான் அங்கு யூஸ் செய்யப்பட்டது. இதன் தடுப்பாற்றல் குறைவாகவே உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+