இப்போ வங்கதேசத்துக்கிட்ட கூட தோற்கிறோமா? இந்திய அணிக்கு "எதிரியாக" மாறிய ஒரு விஷயம்! பறந்த வார்னிங்
டாக்கா: வங்கதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய அணி முக்கியமான சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வங்கதேசம் டாக்கா மைதானத்தில் நேற்று இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது.
டாப் ஆர்டரில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்த நிலையில் மிடில் ஆர்டரில் இறங்கிய கே. எல் ராகுல் மட்டும் 73 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். அதேபோல் வாஷிங்க்டன் சுந்தர் 19 ரன்கள் எடுத்தார்.

டாப் ஆர்டர்
இது போக டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா 27 ரன்கள், ஷ்ரேயாஸ் 24, தவான் 7, கோலி 9, ஷாபாஸ் அகமது 0 ரன்கள் எடுத்தனர். இதனால் 41.2 ஓவரில் இந்திய அணி வெறும் 186-10 ரன்கள் மட்டும் எடுத்தது. அதன்பின் இறங்கிய இந்திய அணியின் பவுலிங் தொடக்கத்தில் சுமாராகவே இருந்தது. லிட்டோன் தாஸ் 41 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார். ஆனால் மிடில் ஓவர்களில் அதிரடியாக பவுலிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்தது.

மிடில் ஓவர்
மிடில் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்த முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இவர் 3 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் இன்னொரு பக்கம் குல்தீப் சென், வாஷிங்க்டன் சுந்தர் இரண்டு பேருமே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் 136 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டு இருந்தது. இதில் மெஹிடி கேட்சை கீப்பர் கே. எல் ராகுல் விட்டது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது. இந்த கேட்சை விட்டது அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

பீல்டிங்
நேற்று இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. பீல்டர்கள் மைதானத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஆடிக்கொண்டு இருந்தனர். பந்தை தடுக்க பெரிதாக முயற்சி எடுக்கவில்லை. இந்திய அணிதான் தற்போது டாப் 10 ஐசிசி அணிகளில் இந்த வருடம் அதிகம் கேட்ச் விட்ட அணி ஆகும். அந்த அளவிற்கு அணியின் பீல்டிங் மோசமாகி உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. அதேபோல் டி 20 உலகக் கோப்பையிலும் மோசமாக இருந்தது.

தொடர்கதை
கடைசியாக செமி பைனல் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பந்தை தடுக்க முடியாமல் ஷமி போன்றவர்கள் திணறிய விதம், ஓவர் த்ரோ கொடுத்த விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இந்திய அணி கேட்சை விடுவது இன்று, நேற்று நடக்கவில்லை. புதிய பீல்டிங் கோச் வந்ததில் இருந்தே இந்திய அணியின் பீல்டிங் மோசமாகிவிட்டது. ஆர் ஸ்ரீதர் இருந்தவரை இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. ரவி சாஸ்திரி குழு மொத்தமாக சென்ற பின் இந்திய அணியின் கோச்சாக ராகுல் பதவி ஏற்றார்.

பீல்டிங் கோச்
அவரின் பீல்டிங் கோச்சாக டிகே திலீப் நியமனம் செய்யப்பட்டார். இவரின் நியமனத்தில் இருந்தே இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளது. இதனால் இவரை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. டிகே திலீப் சரியில்லை. அவர் வந்த பின்.. நாம் வங்கதேசத்திடம் கூட தோல்வி அடைய தொடங்கிவிட்டோம். உடனே இவரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications