For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“வார்னிங்” - 13 வருசமாக உளவு! வாட்ஸ் அப் செயலியா.. ஸ்பையா? “டெலிட்” பண்ணுங்க - டெலிகிராம் நிறுவனர்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: கோடிக்கணக்கான உலக மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் செயலி ஆபத்தானது என்றும், பயனாளர்களின் தகவல்களை திருடுவதற்காகவும், மக்களை கண்காணிப்பதற்காகவுமே அது இயங்கு வருவதாகவும் டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவேல் துரோவ் எச்சரித்துள்ளார்.

பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் என கொடிகட்டிப் பறந்த சமூக வலைதளங்களுக்கு மத்தியில் சைலண்டான அறிமுகம் கொடுத்து கோடிக்கணக்கான உலக மக்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றி இருக்கிறது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப்புக்கு கிடைத்த கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், வருமானம், வரவேற்பை பார்த்த பேஸ்புக் நிறுவனம், அதன் நிறுவனர்களிடம் பல கோடி ரூபாய் கொடுத்து அதை வாங்கியது. அதிலிருந்து பேஸ்புக்கின் அங்கமானது வாட்ஸ் அப்.

அப்டேடான வாட்ஸ் அப்

அப்டேடான வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பை பேஸ்புக் வாங்கியதில் இருந்து குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, ஸ்டோரீஸ் வைக்கும் வசதி, வாட்ஸ் அப் பே என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அதைவிட அதிக வசதிகளை உள்ளடக்கிய செயலிதான் டெலிகிராம். இதற்கும் கோடிக்கணக்கான பயனாளர்கள் இருக்கிறார்கள்.

டெலிகிராம்

டெலிகிராம்

சொல்லப்போனால் டெலிகிராமில் இடம்பெற்ற வசதிகளைதான் பின்னாட்களில் வாட்ஸ் அப் காப்பி செய்துவிட்டதாகக் கூட குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இன்று வரை டெலிகிராமில் இடம்பெற்று இருக்கும் சேனல் வசதி, கருத்துக்கணிப்பு வசதி போன்றவை வாட்ஸ் அப்பில் இடம்பெறவில்லை.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

கடந்த 2020 ஆம் ஆண்டு வாட்ஸ் அப் தனிநபர் தகவல்களை பயன்படுத்தும் வகையில் புதிய விதிகளை கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக பலரும் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கினர். ஆனால், காலப்போக்கில் மீண்டும் வாட்ஸ் அப்பிலேயே மக்கள் கரை ஒதுங்கினர்.

 பாவெல் துரோவ்

பாவெல் துரோவ்

இதற்கிடையே வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவில் பாதுகாப்பு குறைபாடு அண்மை கண்டுபிடிக்கப்பட்டதாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். "தங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் மக்கள், வாட்ஸ் அப் தளத்தில் இருந்து வெளியேற வேண்டும். வேறெந்த மெசேஜிங் செயலியை வேண்டுமானாலும் பயன்படுத்துங்கள். வாட்ஸ் அப் தவிர.

உளவு பார்க்கிறது

உளவு பார்க்கிறது

கடந்த 13 ஆண்டுகளாக வாட்ஸ் அப் ரகசிய கண்காணிப்பு கருவியாக செயல்பட்டு வருகிறது. டெலிகிராமை மக்கள் பயன்படுத்துமாறு நான் வற்புறுத்தவில்லை. உங்கள் ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் இருந்தால் அதன் மூலம் அதில் இருக்கும் உங்களின் அனைத்து விதமான டேட்டாக்களையும் அதனால் பயன்படுத்த இயலும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

வாட்ஸ் அப் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் பயன்படுத்துவது என்பது உங்கள் ஸ்மார்ட் போனை மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு நீங்களே ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதை போன்றது." என்றார். தொடர்ந்து வாட்ஸ் அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் கடந்த 2016 ஆம் ஆண்டு பாவெல் அதிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

English summary
Pavel Durov, the founder of the Telegram app, has warned that WhatsApp, which is used by millions of people around the world, is dangerous and is being used to steal user information and monitor people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X