50 அமைச்சர்கள் எங்கே? பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம்.. அதிர்ந்து போன இம்ரான் கான்!
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அவர் சார்ந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த 50 அமைச்சர்களை காணவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Recommended Video
பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடக்கிறது.

பதவி விலகும் திட்டத்தில் இம்ரான் கான்
இந்த நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தால் அதற்கு முன்னதாக தாமாகவே முன்வந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே முதஹிதா கவுமி கட்சியின் தலைமை இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று பிரம்மாண்ட பேரணி
இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் சார்ந்த தெஹ்ரிக் கட்சி சார்பில் இன்று நீதியுடன் நிற்போம் என்ற பெயரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற உள்ளது. கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் புடைசூழ நடைபெறும் அந்த பேரணியில் தனது ராஜினாமாவை அவர் அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

50 அமைச்சர்களை காணவில்லை
இத்தகைய அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என 50 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் யாரின் நடமாட்டத்தையும் சமீப காலமாக வெளியில் காண முடியாததால் சந்தேகம் அதிகரித்துள்ளது.

25 பேர் மத்திய அமைச்சர்கள்
காணாமல்போன அமைச்சர்களில் 25 பேர் மத்திய அமைச்சர்களும் மாகாண ஆலோசகர்களும் சிறப்பு உதவியாளர்களும் ஆவார்கள். 4 பேர் மாநில அமைச்சர்களும், மற்ற 4 பேர் உதவியாளர்களும், 19 பேர் சிறப்பு உதவியாளர்களும் ஆவார்கள்.

இம்ரான் கானை எதிர்த்த அமைச்சர்கள்
குறிப்பாக பாகிஸ்கான் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக எதிர்த்து வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ஆற்றல்துறை அமைச்சர் ஹம்மாத் அசார், பாதுகாப்புத்துறை அமைச்சர் பர்வேஸ் கட்டக், உள்கட்டமைப்புத்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலே இல்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications