For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அச்சுறுத்தும் ‘எபோலா’... சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்த் தொற்றைத் தொடர்ந்து உலக சுகாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனமான டபிள்யூ. ஹெச். ஓ.

எபோலா வைரஸ் தொற்று காரணமாக மேற்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் எபோலா நோய் பரவி வருகிறது. சுமார் இரண்டாயிரம் பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளான நிலையில், இந்நோய்க்கு இதுவரை 1000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

WHO

மேலும், பல நாடுகளில் எபோலா நோயைத் தடுக்கும் வகையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் எபோலா நோய்த் தொற்றிற்கு எதிராக உலக ளாவிய அவசர நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

  • இந்த வைரஸ் தொற்று தொடர்பில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
  • எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகள் வைத்திருந்தவர்கள் மீது பயணக் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட இடங்களில் இன்னும் பெரிய அளவில் மருத்துவ சிகிச்சை முறைகளை விரிவுபடுத்தப் பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • நான்கு நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எபோலா தொற்று மிக மோசமாக பரவியுள்ளது.
  • கினி, லைபீரியா மற்றும் சியேரா லியோன் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் இந்த நோயினால் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். நைஜீரியாவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
  • எபோலா நோய்க்கு தகுந்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப் படாததால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
West Africa's Ebola epidemic is an "extraordinary event" and now constitutes an international health risk, the World Health Organisation (WHO) said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X