லிப்ட் கேட்டு வந்த கால்பந்து சூறாவளி! வெறும் 23 வயசு! உலகையே தன் பக்கம் திருப்பிய எம்பாபே! யார் இவர்
டோஹா: 80வது நிமிடத்தில் பெனால்டி கிக்கிற்கான விசில் அடிக்கப்பட்டது. எம்பாபே பந்தை பெரிதாக பதற்றம் இன்றி அடிக்க சென்றார். அந்த நொடிக்கு முன்பு வரை ஆட்டம் முழுக்க அர்ஜென்டினா கையில்தான் இருந்தது.அந்த நொடியில் எம்பாபே அடித்த கோல்தான் சுணங்கி இருந்த பிரான்ஸ் ரசிகர்களை.. கொஞ்சம் நிமிர வைத்தது. மோசமாக தோற்க போகிறோம் என்று போனை ஆப் செய்துவிட்டு படுத்து விட்டதை பார்த்தவர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஓகே தோற்று போனாலும்.. டீசண்ட்டாக தோற்க போகிறோம் என்ற நம்பிக்கையை கொடுத்தது.
ஆனால் எம்பாபேவே.. நான் தோற்க வரவில்லை.. ஜெயிக்க வந்து இருக்கிறேன் என்று அடுத்த நிமிடமே இரண்டாவது கோலை போட்டு ஆட்டத்தை அர்ஜென்டினா கையில் இருந்தே பறித்தார் எம்பாபே. அந்த நொடி மெஸ்ஸி முகத்தில் ஈ ஆடவில்லை.. பிரான்ஸ் கதை முடிந்ததை என்று முற்றுப்புள்ளி வைத்தவர்களுக்கு அது தொடக்க புள்ளி என்று நிரூபித்தார் எம்பாபே!

எம்பாபே!
அந்த 80வது நிமிட கோல் மற்றும் 81வது நிமிட கோலுக்கு முன்புவரை அர்ஜென்டினா காலில்தான் பெரும்பாலும் பந்து இருந்தது. அவர்கள் தொடக்கத்திலேயே 2 கோல் போட்டும் கூட நேரத்தை போக்காமல் முடிந்த அளவு அக்கரசிவ் ஆட்டம்தான் ஆடிக்கொண்டு இருந்தனர். இதனால் எம்பாபே காலுக்கு பந்து செல்லவே இல்லை. 80, 81 நிமிடங்களில் தனக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் கட்சிதமாக பயன்படுத்திக்கொண்டு எம்பாபே அடுத்தடுத்து கோல்களை அடித்தார். அதன்பின் கூடுதல் நேரத்தில் 108வது நிமிடம் மெஸ்ஸி அர்ஜென்டினாவிற்கு இன்னொரு கோல் போட்டு முன்னிலை பெற வைத்தார்.

சூட் அவுட்
விடுவேனா என்று மீண்டும் பெனால்டி கிக்கில் 118வது நிமிடத்தில் எம்பாபே தனது ஹாட் டிரிக் கோலை அடித்து சமன் செய்தார். இதன்பின் நடந்த சூட் அவுட்டிலும் எம்பாபே பிரான்சுக்காக தனக்கான வாய்ப்பை கட்சிதமாக பயன்படுத்தி கோல் அடித்தார். நேற்று பிரான்ஸ் அடித்த கோல்கள் 5. இதில் 4 எம்பாபே அடித்தது. இதுதான் அவருக்கு கோல்டன் பூட்டையும் கொடுத்தது. ஒற்றை ஆளாக அர்ஜென்டினா நாட்டையே கலங்க வைத்து இருக்கிறார் இளம் கால்பந்து புயல்.. வெறும் 23 வயதே ஆகும் எம்பாபேதான் கால்பந்து உலகின் அடுத்த கோட்! நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ சகாப்தம் முடிகின்றன நிலையில் எம்பாபேதான் இனி கால்பந்து உலகை ஆள போகும் மன்னன்!

கால்பந்து புயல்
மொனாகோ கிளப் அணியில் இவர் தொடக்க காலத்தில் இருந்த போது அணியில் வாய்ப்பு கிடைப்பதே கடினமாக இருந்தது. இவர் ஆட்ட ஸ்டைலை பார்த்து இவருக்கு வாய்ப்பு கொடுக்கவே மேனேஜ்மெண்ட் யோசித்தது.. பல நாட்களில் பென்ச் செய்யப்பட்ட இவரிடம் அவரின் அப்பா சொன்ன ஒரு வாசகம்தான் அவரை மாற்றியது. "நீ மற்றவர்களை போல ஆட நினைக்காதே. ரொனால்டோ போல ஆட பார்க்காதே. உன் அணிக்காக உன்னை மாற்றாதே. உன் உண்மையான திறமையை வெளிக்காட்டு. உனக்கு பிடித்த மாதிரி ஆடு.. உன் திறமை வெளிப்படும்" என்று தனது தந்தை சொன்னதை கேட்டு எம்பாபே தனது ஆட்டத்தின் ஸ்டைலேயே மொத்தமாக மாற்றினார்.

போண்டி
பாரிசுக்கு அருகே போண்டி என்ற சிறிய நகரத்தில் பிறந்தவர்தான் எம்பாபே.. இவர் அப்பாவும் அம்மாவும் கால்பந்து வீரர், வீராங்கனைகளாக இருந்தவர்கள். இதனால் தொடக்கத்தில் இருந்தே எம்பாபே கால்பந்து ஆடி வளர்ந்து இருக்கிறார். மகனிடம் திறமை இருப்பதை உணர்ந்து கொண்ட அப்பா வில்பர்ட் இவருக்கு பயிற்சி கொடுத்து, இவரின் ஏஜெண்டாகவும் மாறி இருக்கிறார். "இந்த நகரத்தில் எதுவும் சாத்தியம்" என்பதுதான் போண்டி நகரத்தின் நுழைவாயிலில் எழுதப்பட்டு இருக்கும் வசனம். எம்பாபே அந்த நகரத்தில் பிறந்ததால்தான் என்னவோ.. எதுவும் சாத்தியம் என்பதை நேற்று களத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறார்.

எதுவும் சாத்தியம்
இந்த நகரம்தான் எம்பாபேவை வளர்த்து எடுத்தது. காரணம்.. அந்த போண்டி நகரம் என்பது கிட்டத்தட்ட அகதிகளின் சொர்க்கம். பிரான்ஸ், ஆப்ரிக்க, அமெரிக்க, ஆசிய, அரபு நாட்டு மக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இந்த ஒரு சிட்டியில் வசித்து வருகின்றனர். கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு என்று பல துறைகளில் இந்த ஒரு சிட்டி மக்கள் மட்டும் பிரான்சில் கோலோச்சி வருகிறார்கள். அதே நகரத்தில் இருந்து வந்து தற்போது பிரான்சுக்கு மட்டுமல்ல.. கால்பந்து உலகிற்கே சூப்பர் ஸ்டாராகி உள்ளார் எம்பாபே.

ரொனால்டோ
ரொனால்டோவின் தீவிர ரசிகரான எம்பாபே சிறு வயதில் இருந்தே ரொனால்டோவை பார்த்து வளர்ந்து இருக்கிறார். தனது வீடு முழுக்க ரொனால்டோ போஸ்டர்களால் அலங்கரித்து இருக்கிறார். முன்னாள் பிரான்ஸ் வீரர் ஜிடாவேவிற்கும் இவர்தான் தீவிர ரசிகர். அவர் சிறு வயதில் இருந்து பல முறை சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சந்தித்து தேவையான ஆலோசனைகளை பெற்று இருக்கிறார். இவரின் குடும்பம் எம்பாபே கிளப் போட்டிகளுக்கு வரும் முன் கடுமையான வறுமையில் திணறி இருக்கிறது. ஏன் எம்பாபே தனது முதல் மொனாகோ கிளப் போட்டி தேர்விற்கே அழுக்கு ஷூவில் லிப்ட் கேட்டுத்தான் வந்து இருக்கிறார். அந்த அளவிற்கு தொடக்க காலத்தில் இவரின் குடும்பம் வறுமையில் வாடி இருக்கிறது.

சொந்த கார்
பின்னர் இவரின் ஆட்டத்தை பார்த்து பிரான்ஸ் ஜாம்பவான் ஜிடாவே இவரை காரில் கூட்டி சென்று டிராப் செய்தது எல்லாம் வேறு கதை! பிரான்ஸ் தேசிய அணியில் நுழைந்ததில் இருந்தே உலக அளவில் கவனிக்கப்பட்டு வரும் இவர் 2017ல் கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வெறும் 19 வயசுதான். அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம் 250 மில்லியன் யூரோ. கூடுதலாக ஒப்பந்தத்திற்கு 100 மில்லியன் யூரோ வழங்கப்பட்டது. கால்பந்து ஜாம்பவான்கள் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் அடுத்த சீசன் ஆடுவது சந்தேகமாக உள்ள நிலையில் எம்பாபே புதிய GOAT பட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்!

ஆட்டம் வெற்றி
2024 ஃபிபா உலகக் கோப்பை கொண்டாட்டமாக நடந்து முடிந்துள்ளது. கடைசி உலகக் கோப்பையில் நிறைவேறிய மெஸ்ஸியின் கனவு, எம்பாமே போட்ட 4 கோல்கள், சூட் அவுட் வரை சென்ற ஆட்டம் என்று பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நேற்றைய இறுதி போட்டி நடந்துள்ளது. கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க.. 30 நிமிடம் எக்ஸ்டரா டைம் கொடுத்து.. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றது.பெனால்டியில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட, பிரான்ஸ் 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் அர்ஜெடினா அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மெஸ்ஸி 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அதாவது மரடோனா தலைமையில் கடைசியில் அர்ஜென்டினா கோப்பையை வென்ற அதே வருடம்தான் மெஸ்ஸி பிறந்தார். இப்போது அவர் தனது கடைசி கால்பந்து தொடரில் தந்து நாட்டிற்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து உள்ளார். ஆட்டத்தை வென்றவர்கள் கோப்பையை வெல்வார்கள்.. சிறப்பாக அடியவர்கள் இதயத்தை வெல்வார்கள் என்பார்கள்.. எம்பாபே இதில் இதயத்தை வென்று இருக்கிறார்.. மொத்த உலகத்தின் இதயத்தையும்!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications