அச்சுறுத்தும் கொரோனா கேஸ்கள்.. சீனா உடனே விளக்கம் அளிக்க வேண்டும்.. உலக சுகாதார நிறுவனம் அதிரடி
ஜெனீவா: சீனாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், அந்நாட்டில் வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து சீனா விளக்கம் அளிக்க முன்வர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த முறை கொரோனா பரவலை சீனா மூடி மறைத்ததே, உலக நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என அனைத்து தரப்பினரும் கூறி வந்த நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்திதருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூடி மறைத்ததால் வந்த வினை
சீனாவின் ஊஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், டிசம்பர் மாதத்துக்குள் அந்நாடு முழுவதும் பரவி மனிதர்களை கொத்து கொத்தாக கொன்று வந்தது. எனினும், இப்படியொரு வைரஸ் தங்கள் நாட்டில் பரவுகிறது என சீனா தெரிவிக்கவில்லை. பின்னர், அந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கு பரவி, ஒருகட்டத்தில் உலகையே ஆக்கிரமித்தது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு கண்டனம்
சீனாவின் இந்த அலட்சியப்போக்கால், உலகமே வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாக தெரிவித்தார். மேலும், சீனாவில் இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஆனால், சீனாவுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும், சீனாவில் கொரோனா எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்யவும் அது மெனக்கடவில்லை. இதனால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட உலக சுகாதார நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா ஒருபடி மேலே சென்று, உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தியது.

மீண்டும் அச்சுறுத்தும் சீனா
இந்த சூழலில்தான், தற்போது சீனாவில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவி, அங்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாளொன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. இது உலக நாடுகளை மீண்டும் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், கடந்த முறையை போலவே இப்போதும் தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு நிலவரம் குறித்து சீனா வாய் திறக்க மறுத்து வருகிறது.

"விளக்கம் அளிக்க வேண்டும்"
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சீனாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பாதிப்புகளும் மோசமடைந்து வருவதாக தகவல் வருகின்றன. இது மிகவும் கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. தங்கள் நாட்டில் வைரஸ் பரவல் எப்படி இருக்கிறது, எப்படிப்பட்ட பாதிப்புகளை உண்டாக்குகிறது என சீனா இதுவரை கூறவில்லை. இதுகுறித்து அந்நாடு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான், மற்ற நாடுகள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். சீனாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பல நாடுகள் கட்டுப்பாடு விதித்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது" என டெட்ரோஸ் அதானம் கூறினார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications