ஒரு நாட்டையே உலுக்கிய.. ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் "ஜன்னல்".. பிரதமரே கோபப்பட்ட சம்பவம்! அப்படி என்ன நடந்தது
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பாய்ஸ் ஹாஸ்டல் ஒன்றால் அந்த நாட்டு பிரதமரே கோபம் அடைந்து இருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரையே கோபம் அடைய செய்யும் அளவிற்கு அந்த பாய்ஸ் ஹாஸ்டலில் அப்படி என்ன நடந்தது?
பொதுவாக பாய்ஸ் ஹாஸ்டல் என்பது உலகம் முழுக்கவே ஒரே மாதிரியாகவே இருக்கும். சத்தம் போட்டுகொண்டு, பெரிதாக ரூல்ஸ் எதுவும் இன்றி, விரும்பியதை செய்து கொண்டு விட்டேத்தியாக சுற்றும் இளைஞர்கள் நிரம்பியதாகவே கல்லூரி பாய்ஸ் ஹாஸ்டல்கள் இருக்கும்.

படிக்கும் க்ரூப்ஸ், ஸ்போர்ட்ஸ் க்ரூப், குடிக்கும் குரூப்ஸ், வார்டனாலே அடிப்போம் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சண்டைக்கு செல்லும் க்ரூப் என்று பொதுவாக ஹாஸ்டல்களில் நிறைய க்ரூப் இருக்கும். அதில் ஒரு க்ரூப்தான் பெண்களை கேலி செய்யும் கேங்க்.
பாய்ஸ் ஹாஸ்டல் பக்கம் பெண்கள் வந்தாலே அவர்களை பார்த்து ஓ என்று கத்துவதுதான் இது போன்ற கேங்குகளின் வேலை. இந்த நிலையில்தான் பாய்ஸ் ஹாஸ்டலில் நடந்த ஒரு சம்பவம் ஒன்று ஸ்பெயின் நாட்டையே உலுக்கி உள்ளது. ஸ்பெயினில் இருக்கும் Complutense University of Madridல்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு இருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலில் இருக்கும் மாணவர்கள் நடந்து கொண்ட விதம்தான் சர்ச்சையாகி உள்ளது. அந்த இடத்திற்கு அருகிலேயே எதிர் முனையில் பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் பெண்கள் சிலர் அந்த வழியாக சென்றுள்ளனர்.

தாங்கள் தங்கும் இடத்திற்கு செல்வதற்காக பெண்கள் சிலர் நடந்து பாய்ஸ் ஹாஸ்டல் வழியாக சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் ஹாஸ்டலில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் மொத்தமாக ஜன்னல் கதவை திறந்து ஓ என்று கத்தி உள்ளனர். அதோடு நிற்காமல் தவறான அர்த்தம் வரும் ஸ்பானிஷ் பாடல்களை பாடி உள்ளனர். ஈவ் டீசிங் செய்யும் விதமாக மோசமான அர்த்தம் கொண்ட பாடல்களை பாடி உள்ளனர்.
சிலர் ஒரு படி மேலே போய் பெண்களை கொச்சையான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதிலும் சிலர்.. நீங்கள் தனியாக இங்கே வந்தால் என்ன நடக்கும் தெரியுமா என்று கூறி.. அதன்பின் பாலியல் வன்புணர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்களை பாய்ஸ் ஹாஸ்டலுக்கு வர சொல்லி ஆண்கள் தொடர்ந்து கத்தி உள்ளனர். ஜன்னலில் இருந்து டார்ச் வைத்தும் அடித்துள்ளனர். இவை அனைத்தையும் அந்த பெண்கள் வீடியோ எடுத்து நெட்டில் விட்டனர்.

இதை ஸ்பானிஷ் ஊடகங்கள் பல வெளியிட்டு கடுமையாக விமர்சனங்களை செய்து வருகின்றனர். அந்நாட்டு பெண்ணியவாதிகள் பலர் இந்த மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு நிற்காமல் அந்த மாணவர்கள், பெண்களுக்கு வன்கொடுமை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை சாதாரணமாக எடுக்க கூடாது என்று விமர்சனம் வைத்துள்ளனர்.
மொத்த நாட்டையே இந்த வீடியோ தற்போது உலுக்கியுள்ளது. அந்நாட்டு பெண் அமைச்சர்கள் பலர் இதற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அந்த ஆண்களை பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடுமையான புகார்களை வைத்தனர். இந்த நிலையில்தான் அந்நாட்டு பிரதமர் பெட்ரா சான்செஸ் இதை நேரடியாக விமர்சித்து உள்ளார்.
இது மிக மிக மோசமான சம்பவம். இதை எல்லாம் எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர்களை போன்ற ஆண்களை தண்டிக்க வேண்டும். இந்த பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும். போதும். பெண்களை இப்படி நடத்துவதை நிறுத்துங்கள். இது மோசமான பழக்கம் என்று விமர்சனம் வைத்து உள்ளார்.
இந்த சம்பவத்தில் அந்த ஆண்கள் பயன்படுத்திய சில ஸ்பானிஷ் வார்த்தைகள்தான் இந்த சர்ச்சை பெரிதானதற்கு காரணம். இந்த ஹாஸ்டல் ஆண்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு உரிய பாடம் புகட்டப்படும். அவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications