இறந்துபோன "அம்மா"வை காட்டிய கூகுள் எர்த்.. நெகிழ்ந்து போன மகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இறந்து போன தாயை கூகுள் எர்த் காட்டியதால் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி நெகிழ்ச்சியடைந்துள்ளார்,

இங்கிலாந்தில் வசிக்கும் அமெரிக்கரான டினைஸ் அண்டர்ஹில், 18 மாதங்களுக்கு முன் இறந்துபோன தன் தாயை கூகுள் எர்த்தில் பார்த்து வியந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் டினைஸின் தாயார் பெரில் டர்ட்டான் மரணமடைந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், டெனிஸ் தனது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, தற்செயலாக இறந்துபோன தன் தாயின் வீட்டு முகவரியை கூகுள் எர்த்தில் தேடியுள்ளார்.

அதோ என் அம்மா

அதோ என் அம்மா

என்னுடைய அம்மாவின் பழைய வீட்டை எதேச்சையாக நான் கூகுள் எர்த்தில் தேடினேன். எனக்கு ஆச்சரியம் பரிசாகக் கிடைத்தது. கூகுள் எர்த்தில் வந்த புகைப்படத்தில் என்னுடைய அம்மா செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த படம் இருந்தது.

செடிகளுக்கு தண்ணீர் விடும் தாய்

செடிகளுக்கு தண்ணீர் விடும் தாய்

வீட்டின் முகப்பில் எப்போதும் செடிகள் இருக்கும். அந்தச் செடிகளுக்கு ஓய்வு நேரத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதையே அவர் செய்து வந்தார். கூகுள் எர்த்தம் அந்தப் படத்தையே தான் காட்டியது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தாயாரின் புகைப்படத்தை பார்த்த டினைஸ் கண்கலங்கி அழுதுள்ளார். இப்போதும் கூட பல சமயங்களில் தற்செயலாக என் அம்மாவை நான் அழைப்பதுண்டு. இன்று கூகுள் எர்த்தில் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில், மகிழ்ச்சியாக உள்ளது' என டினைஸ் கூறியுள்ளார்.

Try in Google Search! South Indian Masala vs North Indian Masala-Oneindia Tamil
கூகுள் எர்த்தின் சிறப்பு

கூகுள் எர்த்தின் சிறப்பு

விண்வெளியில் இருந்து பூமியைப் பார்க்கும்பொழுது பூமி எப்படித் தோற்றமளிக்கும் என்பதை புகைப்படங்களுடன் கூகுள் எர்த்தில் பார்க்கலாம். ஒவ்வொரு சிறு துண்டுநிலம், வீடு, வீதி, என அனைத்து நகரத்து அமைப்புகளையும் உங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டே பார்க்கும் வசதிகொண்டது இந்த கூகுள் எர்த்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An American woman living in the UK was left stunned after she saw her mother pictured on Google Street View, 18 months after she passed away.
Please Wait while comments are loading...