உலக சாம்பியன் ஷிப் போட்டி.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தல்.. வெள்ளி பதக்கம் வென்றார்
ஒரேகான்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தினார். இறுதி போட்டியில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
Recommended Video
18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கணைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்று உள்ளார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாக செயல்பட்டார். தகுதி சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். இதையடுத்து இன்று இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

88.13 மீட்டருக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா
இன்றைய இறுதிபோட்டியில் நீரஜ் சோப்ரா தனக்கான முதல் வாய்ப்பில் ‛பவுல்' செய்தார். இதையடுத்து 2வது வாய்ப்பில் 82.39 மீட்டருக்கு ஈட்டி எறிந்தார். 3வது வாய்ப்பில் 86.37 மீட்டர் தொலைவுக்கும் ஈட்டியை வீசினார். இதன்மூலம் அவருக்கு பதக்க வாய்ப்பை உறுதி செய்தார். இதையடுத்து நீரஜ் சோப்ரா தனது 4 வது வாய்ப்பில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை வீசி 2வது இடம் பிடித்தார். 5வது மற்றும் 6வது வாய்ப்பை ‛பவுல்' செய்தார்.

வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்
5வது, 6வது வாய்ப்பை நழுவவிட்டாலும் கூட 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்ததன் மூலம் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்தால் 39 ஆண்டு இந்திய வரலாற்றில் தங்கம் வென்ற முதல் வீரர் என்று சரித்திரத்தை படைத்திருப்பதார். இருப்பினும் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் அஞ்சு பாபி ஜார்ஜூக்கு பிறகு பதக்கம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

ஒலிம்பிக்கின் தங்கமகன்
முன்னதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 32வது ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications