For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடடா 60 வயதை எட்டப் போகுது உலகின் முதல் அணுமின் நிலையம்!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உலகிற்கே அணுசக்தியின் நன்மைகளை எடுத்துக் காட்டிய உலகின் முதல் அணுமின் நிலையம், இந்த வாரம் தன்னுடைய 60 வயதை எட்டுக்கின்றது.

1954, ஜூன் 26 இல் தொடங்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் வெற்றிகரமான அடித்தளமாக அமைந்தது.

அதன்பிறகு பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியால் இந்தியாவில் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்திக்காக பார்வையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராமத்தில் அமைந்த அணு உலை:

கிராமத்தில் அமைந்த அணு உலை:

இந்த நிலையம் அமைக்கப்படும் முன்னால், அரசாங்கம் இதற்கான சரியான இடத்தைத் தேடி மாஸ்கோவின் 150 கிலோமீட்டர் தொலைவில் பியாட்கினோ என்னும் கிராமத்தில் ஆரம்பித்தனர்.

ஒரு வருடம் நடைபெற்ற கட்டுமானம்:

ஒரு வருடம் நடைபெற்ற கட்டுமானம்:

இதற்கான கட்டிட அமைப்பானது 1950 இல் தயாரிக்கப்பட்டு, ஒரு வருடம் கழித்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. முதல் அணு உலை 9 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது.

அணு ஆயுத திட்டத்தின் தந்தை:

அணு ஆயுத திட்டத்தின் தந்தை:

இந்த அணு உலையின் தொடக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் இகோர் குர்ச்தாவ். இவர்தான் சோவியத் அணு ஆயுத திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்.

முதல் அணு உலை தொடக்கம்:

முதல் அணு உலை தொடக்கம்:

சரியாக ஜூன் 26, 1954 ஆம் ஆண்டு மாலை 5.45 மணியளவில் உலகின் முதல் அணு உலையான இது, தன்னுடைய பணியை வெற்றிகரமாகத் தொடங்கியது.

மின்சாரம் வழங்கிய அணு உலை:

மின்சாரம் வழங்கிய அணு உலை:

5 மெகாவாட் திறன் கொண்ட இந்த அணு உலையானது, மொத்த நகரத்திற்கும் மின்சாரத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் சில பொருளாதரக் காரணங்களால் இந்த அணு உலையானது 2002இல் மூடப்பட்டது.

தொடங்கியவர் மூடினார்:

தொடங்கியவர் மூடினார்:

இதில் சுவாரசியம் என்னவென்றால் 1954இல் யாரால் இந்த அணு உலை ஆரம்பிக்கப் பட்டதோ அவராலேயே இந்த அணு உலை மூடப்பட்டதுதான்.

அருங்காட்சியகம் ஆகும் அணு உலை:

அருங்காட்சியகம் ஆகும் அணு உலை:

ரஷ்ய அரசாங்கம் தற்போது அங்கு ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க முயன்று வருகின்றது. இந்த அணு உலையானது தினமும் 2000 பார்வையாளர்களுக்கு மேலாக வந்து போகும் இடமாகவும், குழந்தைகளுக்கான படிப்பு தொடர்பான கருத்தரங்குகள் நடைபெறும் இடமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The first nuclear power plant in the world, which showcased the peaceful uses of atomic energy to the world, especially during the Cold War era, turns 60 this week. Launched on June 26, 1954, then Prime Minister Jawaharlal Nehru and Indira Gandhi, who also strongly batted for India's peaceful use of nuclear energy, visited the Obninsk plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X