For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

175 ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டது "செல்பி"!

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகின் முதல் செல்பி சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டோகிராபர் ஒருவரால் எடுக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

செல்பி எனப்படும் தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்வது வெறித்தனமாக மக்களிடையே பரவி வருகிறது. மற்றவர்கள் உதவி இல்லாமல் தனியே புகைப்படம் எடுக்கத் தொடங்கியவர்கள், தற்போது மெல்ல மெல்ல செல்பி, குரூப்பியாக மாறி வருகிறது.

இந்நிலையில், உலகின் முதல் செல்பி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

World’s first selfie was taken in 1839

அமெரிக்காவில்...

அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் வாழ்ந்து வந்தவர் ராபர்ட் கார்னெலியஸ். இவர் கடந்த 1839-ம் ஆண்டு முதல் ‘செல்பி' போட்டோ எடுத்துள்ளார். அப்போது அவருக்கு வயது 30.

முதல் செல்பி...

தனது தந்தையின் கடையை செல்பி முறையில் போட்டோ எடுத்த, ராபர்ட் அந்த போட்டோவின் பின்புறத்தில் ‘முதல் ஒளிப்படம். எடுக்கப்பட்டது 1839ம் ஆண்டு' என எழுதி வைத்துள்ளார்.

5 நிமிடம் உட்கார்ந்திருந்தாராம்

தனது தந்தையின் கடைக்குப் பின்னால் கேமராவை வைத்து விட்டு லென்ஸ் மூடியை எடுத்த பின்னர் வேகமாக ஓடி வந்து பிரேமுக்குள் உட்கார்ந்துள்ளார். கேமரா கிளிக்கிட்டதும் எழுந்தார். கிட்டத்தட்ட 5 நிமிடம் அவர் ஸ்னாப் எடுக்கும் வரை உட்கார்ந்திருந்தாராம்.

கெமிக்கல் கோட்டிங்...

ராபர்ட் அடிப்படையில் ஒரு கெமிஸ்ட் ஆவார். கெமிக்கல் கோட்டிங், மெட்டல் பாலிஷிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். நண்பர் ஒருவர் மூலம் புகைப்படக் கலையில் ஆர்வம் பிறக்க அதில் ஈடுபட்டார்.

2 ஆண்டு மட்டும்

2 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராக வலம் வந்த ராபர்ட், அதன் பின்னர் தனது தந்தை நடத்தி வந்த விளக்கு வியாபாரத்தை கவனிக்கச் சென்று விட்டாராம்.

மரணம்...

பின்னர், செல்வந்தராக வாழ்ந்த ராபர்ட், 1893ம் ஆண்டு தனது 84 வயதில் காலமானார்.

English summary
The “selfie” has recently made its way into the dictionary, but the world’s first known self-portrait was taken 175 years ago by an American photographer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X