"முடிஞ்சா தொட்டு பாரு.." யூனுஸ் அரசுக்கு ஹசீனா மகன் நேரடி சவால்.. வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம்?
டாக்கா: வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சஜீப் வாஜெட் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில் இப்போது சட்டவிரோத ஆட்சி நடப்பதாக கூறிய அவர், முடிந்தால் ஹசீனாவை தொட்டு பாருங்கள் என்றும் சவால் விடுத்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு திடீரென வெடித்த போராட்டம் மாபெரும் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் பல நூறு பேர் உயிரிழந்தனர். அப்போது தான் அங்குப் பிரதமராக இருந்த ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பி வந்தார். தொடர்ந்து அங்கு யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.

கடந்தாண்டு நடந்த வன்முறை தொடர்பான வழக்கில்.. ஹசீனா மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளதாகச் சொல்லி.. வங்கதேச சிறப்பு நீதிமன்றம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், இந்தியாவில் வசித்து வரும் ஹசீனாவை நாடுகடத்த வேண்டும் என கோரிக்கையும் வைத்திருக்கிறது. இதற்கிடையே மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜெட் அளித்துள்ள நேர்காணலில்.. முகமது யூனுஸ் அரசு மீது சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.
தொடக்கூட முடியாது
யூனுஸ் அரசால் தனது தாயைக் கொல்ல முடியாது என்றும் வங்கதேசத்தில் இப்போது சட்டவிரோத ஆட்சியே நடப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வங்கதேசத்தில் இப்போது நிலவும் ஆட்சி சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது.. அங்கு சட்டப்படி ஆட்சி அமைந்து உரிய விசாரணை நடக்கும்போது இந்த வழக்கு நிலைக்காது.. அவர்களால் எனது தாயைக் கொல்ல முடியாது. எனது தாயைத் தொடக்கூட முடியாது.
வங்கதேசத்தில் இப்போது அனைத்தும் சட்டவிரோதமானது.. அரசியலமைப்புக்கு எதிரானது.. அடிப்படை விதிகளையும் கூட மீறுவதாகவே இருக்கிறது. அங்கு நியாயமான ஆட்சி அமையும்போது இவை அனைத்தும் நிராகரிக்கப்படும், எந்த விதமான சட்டப்பூர்வமான அங்கீகாரத்தையும் பெறாது" என்றார்.
நோபல் பரிசு
வங்கதேசத்தில் இப்போது மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதால் யூனுஸின் நோபல் பரிசை ரத்து செய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்கு அவர், "இதுவரை நோபல் குழுக்கள் தங்கள் பரிசுகளை ஒருபோதும் திரும்பப் பெற்றதில்லை. மியான்மரில் ஆங் சான் சூகிக்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். ஆனால், அவரது ஆட்சியில் தான் ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர்.
அவருக்கும் தான் நோபல் பரிசு கொடுத்திருந்தனர். அதற்கு என்ன சொல்ல முடியும். பொதுவாக லாபி செய்து தான் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறார்கள். ஆங் சான் சூகி முஸ்லீம்களைக் கொன்றார்.. இப்போது யூனுஸ் வங்கதேசத்தை ஒரு தோல்வியடைந்த நாடாகவும், இஸ்லாமியப் பயங்கரவாத நாடாகவும் மாற்றி வருகிறார்.
இந்தியாவுக்குப் பாராட்டு
இந்தியாவில் 'சட்டத்தின் ஆட்சி' நடந்து வருகிறது.. இங்குள்ள அரசு அரசியலமைப்பையும் சட்டங்களையும் பின்பற்றுகிறது. பாஜக என்று இல்லை.. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் கூட நிச்சயம் அவர்களும் சீனாவைப் பாதுகாத்திருப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஹசீனா மீதான தீர்ப்பைப் பற்றிப் பேசிய அவர், "இது ஒரு கேலிக்கூத்து. முதலில் அங்கு ஒரு தேர்ந்தெடுக்கப்படாத, அரசியலமைப்புக்கு முரணான சட்டவிரோத அரசு உள்ளது. அவர்கள் தீர்ப்பாயங்களில் விசாரணையை விரைவுபடுத்த சட்டங்களைத் திருத்தினர். நாடாளுமன்றம் என ஒன்று இருந்தால்தான் சட்டங்களை திருத்த முடியும். இப்போது அங்கு நாடாளுமன்றமே இல்லை. எனவே, இந்த செயல்முறையே சட்டவிரோதமானது.
எல்லாம் சட்டவிரோதம்
இந்த தீர்ப்பாயத்தில் 17 நீதிபதிகளை நீக்கிவிட்டு, அனுபவமில்லாத ஒரு புதிய நீதிபதியை நியமித்தனர். அவர் என் தாயைப் பற்றி வெளிப்படையாகவே மோசமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். எனவே அவர் ஒருதலைபட்சமான நபர் என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், எங்கள் சார்பில் வழக்கறிஞரை கூட நியமிக்க அனுமதிக்காமல் விசாரணையை நடத்தியுள்ளனர்.
பொதுவாகவே வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தி முடிக்கப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் அவர்கள் 140 நாட்களில் முடித்துவிட்டனர். இதனால் தான் சொல்கிறேன் இது கேலிக்கூத்து. காமெடி என்றே சொல்ல வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications