பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்
ஹராரே : ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஈஸ்டர் புனித யாத்திரை மேற்கொண்ட 35 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தென்னாப்பிரிக்க நாடுகளில் பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் போக்குவரத்தை கையாளும் சில ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி, வேக வரம்பை மீறுகின்றனர் என புகார்களும் கூறப்படுகிறது.
குறிப்பாக ஜிம்பாப்வேயில் நடக்கும் விபத்துகளுக்கு சாலைகளின் மோசமான நிலை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே விபத்து
ஜிம்பாப்வேயின் சாலைகள் ஈஸ்டர் காலத்தில் மிகவும் பிஸியாக இருக்கும், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வாழும் இந்த நாட்டில் தற்போது விடுமுறைக் காலம் ஆகும். இது எடுத்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஏராளமான மக்கள் மலைப்பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

பக்தர்கள் பலி
இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 35 ஈஸ்டர் பண்டிகைக்காக பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயின் கிழக்குப் பகுதியில் மலைப்பாங்கான பகுதியில் கிறிஸ்துவ புனிதப் பயணிகளை ஏற்றி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பள்ளத்தில் கவிழ்ந்தது
பேருந்தின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 106 பயணிகளுடன் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது. மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையிலிருந்து நிலைதடுமாறி மிக ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனா்.

மீட்பு பணிகள் தீவிரம்
மோசமான சாலைகளைக் கொண்டுள்ள ஜிம்பாப்வேயில், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓட்டுநா்கள் அதிவேகமாக பேருந்துகளைச் செலுத்துவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications