For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தந்த வேட்டைக்காக கொடூரம்!! ஜிம்பாப்வேயில் 80 யானைகள் கொலை!!

By Mathi
Google Oneindia Tamil News

Elephants
வாங்கே: ஜிம்பாப்வேயில் தந்தங்களுக்காக 80 யானைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் வாங்கே தேசிய பூங்காவில் 80 ஆயிரம் யானைகள் இருக்கின்றன. இது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயம். இந்த சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக யானைகள் இறந்து கிடந்ததும் அவற்றின் தந்ததங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும் அண்மையில் தெரியவந்தது.

யானைகள் தாகம் தீர்க்க வரும் குட்டைகளில் சயனைடு விஷத்தைக் கலந்து கொலை செய்திருக்கின்றனர். இது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜிம்பாப்வே சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வேட்டை கும்பலுக்கு 9 ஆண்டு சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டும், அவர்களை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்றார்.

English summary
Zimbabwean ivory poachers have killed more than 80 elephants by poisoning water holes with cyanide, endangering one of the world's biggest herds, a minister said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X