காஞ்சிபுரத்தில் விசேஷம்.. விரைவில் உலகளந்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்.. குஷியில் துள்ளும் காஞ்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலில் விசேஷம் நடக்க போகிறது. இதனால் காஞ்சிபுரம் பக்தர்கள் படுமும்முரமாக கும்பாபிஷேக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள 22 திவ்யதேசங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில் இத்தலம் கச்சி ஊரகம் என அழைக்கப்படுகிறது. கச்சி என்றால் காஞ்சிபரம் என்பதாகும்..

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டு அருகிலேயே 108 திவ்ய தேசங்களில், 4 திவ்ய தேசங்களை கொண்ட ஒரே திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆரணவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது..
சிறப்புகள்: காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய 4 திவ்யதேசங்கள் இந்த ஒரே கோவிலுக்குள் அமைந்துள்ளன..
கடந்த 2007ம் ஆண்டு, மார்ச் 25ல் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.. எனவே, இந்த கோயிலை புதுப்பித்து மறுபடியும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்களின் தரப்பிலிருந்து, கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தது..
திருப்பணிகள்: இதையடுத்து 1 கோடி ரூபாய் செலவில், கோவில் ராஜகோபுரம், பிற சன்னிதிகள், கோவில் வளாகம் தரை பகுதி என, பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. உலகளந்த பெருமாள் கோவிலில் இந்த திருப்பணிகள் அனைத்துமே கடந்த 2 வருடமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான பணிகளும் நிறைவுபெற உள்ளன.
எனவே, மகா கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் 6 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு நாளைய தினம் யாகசாலை பூஜைகள் தொடங்க இருக்கின்றன..
மகா கும்பாபிஷேகம்: இதில், முதல் நாளே, ஒரு கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து 2 நாட்கள் இரு யாக சாலை பூஜைககள் நடைபெற உள்ளன.. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி அதாவது புதன்கிழமை காலை 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், பரம்பரை அறங்காவலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, போரகத்தி பட்டர் ரகுராம், கோவில் பட்டாச்சாரியார்கள், கைங்கர்யபரர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகிறார்கள்..
ஜரூர் ஏற்பாடுகள்: இந்த கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மோ.அன்பரசன், இந்து சமய அறநிலை துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications