காஞ்சிபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோர்த்தாலயா உருட்டாத! சாமி ஊர்வலத்தில் மாஸ் குத்து குத்திய பூசாரி.. பின்னணியில்.. உருக்கமான காரணம்

Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: ஒரே ஒரு நடனத்தின் மூலம் காஞ்சிபுரத்தில் பட்டாச்சாரியார் ஒருவர் வைரலாகியுள்ளார்.

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் உற்சவர்களை ஊர்வலமாக கொண்டு சென்ற போது அதன் முன்னால் பஜனை செய்யும் குழுவினரில் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒருவர் வித்தியாசமான நடன அசைவுகளை மேற்கொண்டிருந்தார்.

பொதுவாக சுவாமி ஊர்வலத்தின் போது பட்டாச்சாரியார்கள், பஜனை குழுவினர், அர்ச்சகர்கள் நடனம் ஆடுவது வழக்கம். ஆனால் இவரது நடனம் அவற்றிலிருந்து மாறுபட்டது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சினை - தள்ளுமுள்ளு தாக்குதல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வெடித்த வடகலை - தென்கலை பிரச்சினை - தள்ளுமுள்ளு தாக்குதல்

கன்டென்ட்

கன்டென்ட்

நம்ம நெட்டிசன்கள் கன்டென்ட் கிடைத்தால் சும்மா இருப்பார்களா, உடனே அவரது நடனத்துடன் ஜாலியோ ஜிம்கானாவை இணைத்து விட்டார்கள். பின்னர் என்ன ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார். இவர் குறித்து காஞ்சிபுரத்தில் ஒரு யூடியூப் சேனல் பேட்டி எடுத்தது. அதில் அவர் கூறுகையில் என் பெயர் முகுந்த ராமானுஜ தாசன்.

காஞ்சிபுரத்தில் விழா

காஞ்சிபுரத்தில் விழா

காஞ்சிபுரத்தில் தேவாதி தேவராஜனுக்கு விழா நடக்கும் போதெல்லாம் நாங்கள் வந்து தொண்டு செய்வோம். பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். பெருமாளுக்கு ஆடலும் பாடலும் முக்கியம் என எங்கள் குரு சொல்லியிருக்கிறார். அதனால்தான் நர்த்தனத்துடன் பகவானுக்கு இந்த பஜனை கச்சேரியை செய்கிறோம்.

நடனம்

நடனம்

எனக்கு நடனத்தை என் அப்பா சொல்லிக் கொடுத்தார். ஸ்ரீபெரும்புதூர் போகும் போது குரு ஒருவர் ராகத்துடன் பாடினார். அது எனக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அவரது திருவடியை சேவித்து அவரிடம் ராகத்துடன் பாடுவதற்கு கற்றுக் கொண்டேன். கடவுள் முன்பு நர்த்தனம் செய்வது 20, 30 ஆண்டுகளாக செய்து வருகிறோம்.

ஜாலி யோ ஜிம்கானா

ஜாலி யோ ஜிம்கானா

நான் இதற்கு முன்னர் விவசாயம் செய்துள்ளேன், தறி நெய்துள்ளேன். காஞ்சிபுரத்தை சுற்றி பாலும் தயிரும் விற்றுள்ளேன். அப்போது தேவராஜர், முகுந்தா இனி தயிர் பால் விக்கிற வேலையே வேண்டாம், நாடு நகரமும் என் பெயரை சொல்லு என்றார். நான் ஆடிய நடனத்துடன் ஏதேதோ பாட்டுகளை இணைத்துள்ளார்கள்.

தேவராஜ பெருமாள் போட்ட பிச்சை

தேவராஜ பெருமாள் போட்ட பிச்சை

நான் எந்த பாடலுக்கும் ஆடவில்லை. பகவானை நினைத்து நான் ஆடிய நர்த்தனம், இந்த பாட்டுடன் ஓத்து போகிறது என்பதை நான் இப்போது சிந்தனை செய்கிறேன். ஆடலும் பாடலும் எனக்கு தேவராஜ பெருமாள் போட்ட பிச்சை. நான் ஹீட்டர் போடும் போது ஷாக் அடித்துவிட்டது,. நான் கத்துகிறேன், என் மனைவிக்கு கேட்கவில்லை.

உருக்கமான பின்னணி

உருக்கமான பின்னணி

உடனே நான் இறந்து விடுகிறேன். என்னை சுத்தி எல்லாரும் அழுகிறார்கள். அப்போது நான் புது தெம்புடன் எழுந்து உட்கார்ந்து விடுகிறேன். உடனே அழுதவர்கள் எல்லாம் மாயமாகிவிட்டனர். எனவே என் உயிர் தேவராஜ பெருமாள் போட்ட பிச்சை. எனது நடனத்தை தேவராஜர் பெருமாள் கோயில் தேரோட்டத்தின் போது பார்க்கலாம் என்றார்.

English summary
A one Mukunda Ramanujadasan from Kanchipuram Bajanai troop, dance goes trending in Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X