கள்ளக்காதலனுக்காக கணவனை அரிவாள் மனையால் அறுத்து கொன்ற மனைவி.. 10 நாள் கப்சிப்.. கடைசியில் ட்விஸ்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்று எரித்து கொலை செய்த மனைவி 10 நாட்கள் தலைமறைவாக இருந்துவிட்டு பின்னர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பிரேதத்தை மீட்ட போலீசார். கள்ளக் காதலனை தேடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் 7ஆண்டுகளாக வசித்து வருபவர் தங்கவேல்(44). இவருக்கு விமாலாராணி(37) என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ்(14) என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து தொலைபேசி துண்டிக்கப்பட்டுவிட்டன.

ஏற்கவில்லை
மீண்டும் கடந்த 1ம் தேதி தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சந்தேகமடைந்தார்.

வழக்கு
தங்கவேல் அப்பா சோமமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கொலை
இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகி, தன் கணவரை கடந்த 28ம்தேதி மதியம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறினார்.

வாக்குமூலம்
இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளகாதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேற்படி பிரேதத்தை இன்று காலை 8 மணிக்கு ஏரியில் பிரேதத்தை கைப்பற்ற வேண்டும் போது மனைவி விமலா ராணி இங்கில்லை என முன்னுக்கு முரணாக கூறி உள்ளார்.

காஞ்சிபுரம் போலீசார்
அதன்பின் விமலாராணி அளித்த தகவலின் படி கடந்த 2ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அருகே பாதி நிலையில் எரிந்த சடலத்தை இருப்பது இறந்த நபரின் உடல் என உறுதி செய்யப்பட்டது. மணிமங்கலம் காவல்துறையினர் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விமலா ராணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கள்ளக்காதலன் ராஜாவை 3 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு மாதங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications